சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யூனிபார்மை கழட்டிடுவேன்.. மிரட்டிய வழக்கறிஞருக்கு எதிராக போலீஸ் ஆக்சன்.. பார் கவுன்சிலுக்கு கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: காவல்துறையினரை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்த பெண் வழக்கறிஞர் தனுஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பார் கவுன்சிலுக்கு சென்னை மாநகர காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

Recommended Video

    Chennai Lady Advocate போலீசுடன் சண்டை! Viral Video | OneIndia Tamil

    அண்மையில் சென்னை சேத்துபட்டு சிக்னலில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் தலைமைக் காவலர் ரஜித்குமார் உள்ளிட்ட காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாரகள்.

    அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வந்த கார் ஒன்றை மறித்து விசாரணை செய்தார்கள். அப்போது இ பதிவு இல்லாமல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியதாக சட்டக்கல்லூரி மாணவி ப்ரீத்தி ராஜனுக்கு அபராதம் விதித்தார்கள். உடனே அந்த பெண் நடந்த விஷயத்தை வழக்கறிஞரான தன் தாயிடம் கூறி அங்கு வரவழைத்துள்ளார்.

    யூனிபார்மை கழட்டி விடுவேன்.. போலீசை மிரட்டிய வழக்கறிஞரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி யூனிபார்மை கழட்டி விடுவேன்.. போலீசை மிரட்டிய வழக்கறிஞரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

    கடும் வாக்குவாதம்

    கடும் வாக்குவாதம்

    சொகுசு காரில் விரைந்து வந்த அவரது தாயார் தனுஜா ராஜன், முகக்கவசம் இல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரசீதை வீசி எறிந்ததுடன், போலீசாரின் யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று ஒருமையில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பின்னர் அங்கிருந்து தனித்தனி கார்களில் புறப்பட்டுச் சென்றனர். அதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போலீஸார் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    முன்ஜாமீன் மனு

    முன்ஜாமீன் மனு

    போலீஸார் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தாய், மகள் இருவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பினர். இதனால், இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி செல்வக்குமார் முன்பாக நடந்தது.

    தனுஜாவின் மனு தள்ளுபடி

    தனுஜாவின் மனு தள்ளுபடி

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், இதுபோன்ற ஒரு சம்பவத்தில் முன்ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். மேலும் வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார். இதனால் தனுஜா ராஜன் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது,

    பார் கவுன்சிலுக்கு கடிதம்

    பார் கவுன்சிலுக்கு கடிதம்

    இந்த சூழலில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் பார் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், வழக்கறிஞர் தனுஜா மற்றும் அவரது மகளான பயிற்சி வழக்கறிஞர் ப்ரீத்தி ஆகிய இருவரின் விபரங்களையும் குறிப்பிட்டு, இதுபோன்ற செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது. போலீஸார் தங்கள் கடமையை செய்வதற்கு வழக்கறிஞர்கள் உதவியாக இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு இடையூறு செய்வதாக இருக்க கூடாது. எனவே, வழக்கறிஞர் தனுஜா ராஜன்,மீது பார் கவுன்சில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    English summary
    chennai police writes letter to bar council. police request need action against advocate Tanuja Rajan for argument with the traffic police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X