சென்னையில் போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபர்.. துரத்தி சென்ற காவலர் கார் மோதி உயிரிழப்பு!
சென்னை: சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்றவரை பிடிக்க இரு சக்கர வாகனத்தில் துரத்தி சென்ற காவலர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாறுமாறாக போதையில் காரை ஓட்டியபடி சென்றவரை பிடிக்க முயன்றபோது அந்த கார் இடித்து தள்ளியதில் காவலர் மேகநாதன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை பள்ளிக்கரணை அருகே எல்.ஐ.சி நகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் மேகநாதன் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு சக்கர வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு கார் ஒன்று போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்றது.

மேலும் அந்த கார் சாலையில் அங்கும் இங்குமாக சென்றது. கார் ஓட்டுனர் போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் அந்த காரை மேகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தார். கார் வேகமாக சென்ற நிலையில் 200 அடி சாலையில் காமாச்சி மருத்துவமனை அருகே சென்ற போது திடீரென அந்த கார் இவரது மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் மோதியதாக சொல்லப்படுகிறது.
இதில் காரின் முன்பகுதியில் சிக்கி சுமார் 20 அடி தூரத்திற்கு காவலர் மேகநாதன் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கார் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. படுகாயத்துடன் கிடந்த காவலர் மேகநாதனை வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவலர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தாறுமாறாக போதையில் காரை ஓட்டியபடி சென்றவரை பிடிக்க முயன்றபோது காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த காவலர் மேகநாதனுக்கு 7 வயதில் ஒரு மகளும்,ஒன்றரை வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications