சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் சோகம்.. 40 அடி உயர பாலத்தில் விழுந்த தொழிலாளி
சென்னை: சென்னை பூந்தமல்லி பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளி, பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பஞ்சாபைச் சேர்ந்த தேவேந்திர சிங் (27) என்பவர் இன்று பணியில் ஈடுபட்டிருந்த போது, 40 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் புறநகர் ரயில் சேவைகளுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான பயணிகள் விரும்பப்படும் ரயில் சேவையாக மெட்ரோ ரயில் போக்குவரத்து ரயில் சேவைகள் உருவெடுத்துள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். சென்னையில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை (திருமங்கலம், கோயம்பேடு வழி) என இருவழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் சுமார் 54 கிமீ தூரத்திற்கு ஓடுகிறது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

எனவே சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் உடனடியாக தொடங்கப்பட்டு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3-ஆவது வழித்தடம் மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் சிப்காட் வரையிலும், 4-ஆவது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டா் தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலும், 5-ஆவது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் - சோழிங்கநல்லூா் வரையிலும் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதில் பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடம் சென்னையில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் வரை மேம்பால பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப் பாதையாகவும் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ரூ.187 கோடி செலவில் பூந்தமல்லியில் 2-ஆவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் பணிமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல் உயர்மட்டப் பாதை அமைக்கப்பட்டுள்ள குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன் தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயிலுக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி பைபாஸ் - போரூர் இடையே மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூந்தமல்லி மற்றும் மவுண்ட் இடையே பல இடங்களில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என தெரிகிறது. அந்த அளவிற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லி பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளி, பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த தேவேந்திர சிங் (27) என்பவர் இன்று பணியில் ஈடுபட்டிருந்த போது, 40 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications