செல்லம்மா நடிகையுடன் தொடர்பு.. மனைவி திவ்யா ஸ்ரீ புகார்.. நடிகர் அர்னவ்விற்கு சம்மன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவியும் நடிகையுமான திவ்யா ஸ்ரீதரை துன்புறுத்திய வழக்கில் வரும் 14 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் அர்னவ்விற்கு போரூர் மகளிர் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் சக சீரியல் நடிகர் அர்னவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பே லிவ் இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த நிலையில் தற்போது திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில் அர்னவிற்கு செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அன்ஷிதாவுடன் நெருக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை கண்ணால் பார்த்த திவ்யா , கணவர் அர்னவ்விடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது திவ்யாவை அர்னவ் எட்டி உதைத்துள்ளார்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இதையடுத்து அர்னவ் மீது திவ்யா போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அர்னவ்வோ மனைவி திவ்யா, எனது நண்பர் ஈஸ்வருடன் சேர்ந்து கொண்டு தனது வயிற்றில் இருக்கும் சிசுவை கொல்லப்பார்க்கிறார். திவ்யாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் என அர்னவ் பேட்டி கொடுத்தார்.

திவ்யா ஸ்ரீக்கு எதிரான ஆதாரம்

திவ்யா ஸ்ரீக்கு எதிரான ஆதாரம்

மேலும் திவ்யா ஸ்ரீக்கு எதிரான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் ஒரு ட்விஸ்ட்டாக அர்னவ் மீது சக நடிகைகளும் புகார் அளித்தனர். அர்னவ் பணத்திற்காக நடிகைகளுடன் பழகுவார் என குற்றம்சாட்டினர். அது போல் நடிகை ரைஹானாவையும் தனியாக தனது அபார்ட்மென்ட்டிற்கு வருமாறும், அவர் சம்மதம் இல்லாமல் தனது சுண்டுவிரல் கூட ரைஹானா மீது படாது என்றும் உறுதி அளித்தாராம் அர்னவ்.

முஸ்லீம் சமூகம்

முஸ்லீம் சமூகம்

இந்த நிலையில் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த அர்னவ், திவ்யா மதமாறினால்தான் திருமணம் செய்து கொள்வேன் என கட்டாயப்படுத்தினாராம். திவ்யாவும் காதலித்துவிட்டதால் வேறு வழியின்றி மதமாறினாராம். இந்த கட்டாய மதமாற்றம் குறித்து அர்னவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் மாநில மகளிர் ஆணையம் வரை சென்றுள்ளது.

மதமாற்றம்

மதமாற்றம்

திவ்யாவின் புகார் காப்பியில் மதமாற்றம் என்ற வார்த்தையை தவிர்த்த இன்ஸ்பெக்டரிடம் மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி சென்னை போரூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அர்னவ்விற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேவையில்லாமல் பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசி வார்த்தையையும் அர்னவ் விட்டுள்ளார். எனவே அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+