“வானவில் எங்கள் அடையாளம்”.. சென்னையில் LGBTIQA+ மக்களின் உற்சாக பேரணி.. ஆடிப்பாடி கொண்டாட்டம்!
சென்னை: சென்னையில் LGBTIQA+ மக்களின் வானவில் பேரணி இன்று நடைபெற்றது. LGBTIQA+ சமூகத்தைச் சார்ந்தவர்களும், அவர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
"வானவில் என்பதை நீங்கள் எங்களை அவமதிக்க பயன்படுத்தினால் அதையே நாங்கள் அடையாளமாக மாற்றிக் கொள்கிறோம்" என இந்தப் பேரணியில் பங்கேற்ற திருநங்கை ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில், Pride Month என்ற பெயரில் LGBTIQA+ மக்கள் ஒன்று கூடி பிரமாண்ட பேரணிகளை உலகெங்கிலும் நடத்தி வருகின்றனர். LGBTIQA+ மக்கள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சுயமரியாதை பேரணியை நடத்தி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சுயமரியாதை பேரணி இன்று சென்னையில் நடைபெற்றது. தங்களது உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையில் இன்று 17 வது ஆண்டாக இந்தப் பேரணியை நடத்தினர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிற ஊர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். குறிப்பாக இளம்பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர். ஏராளமான திருநங்கைகளும் ஆர்வத்துடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். LGBTIQA+ மக்களின் பெற்றோரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என்ற பாலின வேறுபாடுகளை மறந்து தம் உணர்வுகளுக்கு தகுந்தாற்போல பல வண்ண ஆடை அணிந்து, சிகை அலங்காரம், முக அலங்காரம் செய்து பேரணியில் நடனமாடி மகிழ்ந்தனர். மேளம், தப்பு தாளம் முழங்க, ஆடிப்பாடி உற்சாகத்தில் திளைத்தனர்.
LGBTQ+ மக்கள் மட்டுமின்றி அவர்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் கலந்துகொண்டனர். பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் அவர்கள் பேரணியாகச் சென்றனர்.
வானவில் பேரணியில் பங்கேற்ற திருநங்கை ஒருவர் பேசுகையில், "17வது வானவில் சுயமரியாதை பேரணி மூலமாக நாங்கள் அரசிடம் வைக்கும் கோரிக்கை.. திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்தவருக்கு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும். அதன் மூலம் என்னைப் போன்ற ஆசிரியர்கள் பணி வாய்ப்பை பெறுவோம்.
இப்போது வானவில் தோழர்கள், வானவில் நண்பர்கள் என கேலி கிண்டல் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதனை நாங்கள் அவமானமாக கருதவில்லை. கொச்சையாக சொல்லி வந்த காலம் போய் எங்களை தோழர் என்றும் நண்பர் என பயன்படுத்துவதை வெற்றியாகவே பார்க்கிறோம். வானவில் என்பதை நீங்கள் எங்களை அவமதிக்க பயன்படுத்தினால் அதையே நாங்கள் அடையாளமாக மாற்றிக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications