நடிகையிடம் நெருங்கிய விஐபி அவரா? இவர்தான் அந்த பிரபலமா? சென்னை காளிகாம்பாள் கோயிலில் "காம" பூசாரி
சென்னை: சென்னையில் பிரபல நடிகையை, தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சீரழித்ததாக கூறப்படும் பூசாரியை பிடிக்க போலீசார் மும்முரமாகி உள்ளனர்.
கடந்த 2 நாட்களாகவே, பூசாரி குறித்த இந்த செய்தி மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13ம் தேதி இரவு தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 30 வயது பெண் புகார் ஒன்றை தந்திருந்தார்.

அந்த புகாரில், "பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று வழிபடும்போது, அங்கு பூசாரியாக உள்ள கார்த்திக் முனுசாமி என்பவர் எனக்கு அறிமுகமானார். என்னை காரில் வீட்டில் விட்டுவிட்டு செல்கிறேன் என்று ஒருநாள் அழைத்து சென்றார். பிறகு என்னுடைய வீட்டிற்கு வந்த கார்த்திக், கோயில் தீர்த்தம் என்று கொடுத்தார். அதை குடித்ததுமே நான் மயக்கமடைந்தேன்.
படுக்கை அறை: பிறகு கண்விழித்து பார்த்த போது நான் நிர்வாணமாக படுக்கை அறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பிறகு கார்த்திக் முனுசாமிக்கு போன் செய்து இதுகுறித்து கேட்டபோது, அவர் வீட்டிற்கு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டு, திருமணம் செய்து கொள்வதாக சொன்னார்.
அவருக்கு முதல் மனைவி பிரியா இருந்தும், என்னுடைய வீட்டிலேயே எனக்கு தாலி கட்டினார். இதனால், கணவன் மனைவி போல் குடும்பம் நடத்தினார்.
கட்டாய கருக்கலைப்பு: இதனால் கருவுற்றதால், என்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார். பிறகு விஐபி நண்பர் என்று வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் நெருக்கமாக இருக்க வலியுறுத்தினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
எனக்கு ஆறுதல் சொல்ல வந்த அவரது தோழி சுவேதா என்பவர், என்னை பாலியல் தொழிலுக்கு செல்ல கட்டாயப்படுத்தினார். அதிர்ச்சியடைந்த நான், நடந்த சம்பவம் குறித்து, கார்த்திக் முனுசாமியின் மனைவி பிரியாவிடம் சொன்னேன். அதற்கு அவர், எனது கணவர் குறித்து புகார் அளிக்கக்கூடாது என்று என்னை மிரட்டினார். எனவே, என்னுடைய வாழ்க்கையை சீரழித்த கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் நடிகை தேவி கேட்டுக் கொண்டிருந்தார்.
பெண்கள்: அத்துடன், கார்த்திக் முனுசாமிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு உள்ள நிலையில், அப்பெண்களுடன் அவர் நெருக்கமாக இருந்த வீடியோ, போட்டோ ஆதாரங்களையும் போலீசில் நடிகை தேவி ஆதாரங்களாக தந்தார்.
இந்த புகாரின் மீதும், தேவி தந்த ஆதாரங்களின் அடிப்படையிலும், விருகம்பாக்கம் மகளிர் போலீசார் விசாரணையை கையில் எடுத்தனர்.. அதில், பல பெண்களுடன் பூசாரிக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.. ஏகப்பட்ட இளம்பெண்களின் ஆபாச போட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளர்..
போட்டோக்கள்: அதுமட்டுமல்ல, நடிகை தேவி சொன்ன புகார் அத்தனையும் உண்மை என்று தெரியவந்ததுடன், தேவியின் போட்டோக்களையும், தன்னுடைய பல நண்பர்களுக்கு பூசாரி அனுப்பி வைத்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, பூசாரி கார்த்திக் முனுசாமி மீது ஐபிசி 417, 354(ஏ), 312, 294(பி), 506(2) மற்றும் ஐடி பிரிவு 67ன் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள்.
ஆனால், நடிகை தேவி போலீசுக்கு சென்றதுமே, பூசாரி கார்த்திக் முனுசாமி, தலைமறைவாகிவிட்டார்... அவரை போலீசார் 2 நாட்களாகவே தேடிவருகிறார்கள்.. இந்நிலையில், பூசாரியை பிடிக்க உதவி கமிஷனர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குடும்ப பெண்கள்: பூசாரிக்கு, பல குடும்ப பெண்களிடமும் நெருக்கம் இருக்கிறதாம்.. பலபேரிடம் இப்படி பழக்கம் வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த குடும்ப பெண்களிடம் இயல்பாக பழகி, அவர்களையும் பல விஐபிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பாராம்.. இதற்கு ஒரு தொகையையும் பூசாரி வாங்கி கொள்வாராம்.
பூசாரியை போலீசார் தேடுவதையறிந்து, அவரை வழக்கில் இருந்து விடுவிக்க, தனிப்படை போலீசாருக்கு தொடர்ந்து தொழிலதிபர்கள் பலர் போனை போட்டு உதவி கேட்டு வருவதாக கூறப்படுகிறது... ஆனால் போலீசார் அந்த கோரிக்கையையெல்லாம் ஏற்க மறுத்து விட்டார்களாம். எப்படியும் அவரை கைது செய்தால், பல விவரங்கள் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.
குற்றச்சாட்டுகள்: இந்நிலையில், பூசாரி மீதான அத்தனை குற்றச்சாட்டுகளும் உறுதியான நிலையில், 6 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதால், கார்த்திக் முனுசாமியை பணி நீக்கம் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காளிகாம்பாள் கோயில் நிர்வாகத்தினரை சென்னையில் வசிக்கும் விஸ்வகர்மா மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள்... இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வை மட்டுமே செய்து வரும்நிலையில், விஸ்வகர்மா மக்களே, இந்த கோயிலை காலம்காலமாக நிர்வகித்தும் வருகிறார்கள்... இவ்வளவு பழமையும், சிறப்பும் வாய்ந்த கோயிலில் இப்படி ஒரு பூசாரியா? என்று அதிர்ந்து போயிருக்கிறார்கள் பக்தர்கள்.
தீவிரம்: கார்த்திக்கை பிடித்தால்தான், எந்தெந்த விஐபிகள் அவருடன் தொடர்பில் இருந்தார்கள், யார் யாருக்கெல்லாம், பெண்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள் என்றெல்லாம் பல பூதாரகர உண்மைகள் தெரியவரும் என்பதால், போலீசார் அவரை பிடிக்க மும்முரம் காட்டி கொண்டிருக்கிறார்கள்.
காஸ்ட்லி கார் + விஐபிகளின் தொடர்பு + தொழிலபதிபர்களுடன் நட்பு + ஆடம்பர வாழ்க்கை + ஏகப்பட்ட பெண்கள் என வாழ்ந்து கொண்டிருக்கும் "சொகுசு பூசாரி" கார்த்திக் எங்கே????
மற்றொரு மனு: கோயில் பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கார்த்திக் , தற்போது கோயில் அறங்காவலர் குழு முடிவின்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்... அதேபோல, சென்னையில் பெண் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அர்ச்சகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி இன்னொரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர், அறங்காவலர் குழு தலைவர் உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது எஸ்பிளனேடு போலீசில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications