பாதிரியாரின் கள்ளக்காதல்.. அதென்ன "மூட்டையில்" மாத்திரை? அசிங்கப்பட்ட சென்னை ஜோடி.. பரிதாப மனைவி
சென்னை: சென்னையை சேர்ந்த பாதிரியார், இன்னொரு சிக்கலிலும் சிக்கியுள்ளார்.. இன்னொரு வழக்கும் பாயப்போகிறது.. மனைவியின் கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது?
போதை மாத்திரை விற்பனை செய்ததை கண்டித்ததால், மனைவியை பாதிரியார் கொலை செய்த வழக்கில், மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே குணாபா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்... இவரது மகள் வைஷாலிக்கு 33 வயதாகிறது.. இவரது 35 வயது கணவர் விமல்ராஜ், கிறிஸ்துவ பாதிரியாராக உள்ளார்.. இவர்களுக்கு கடந்த 2020ல் திருமணம் நடந்துள்ளது.. இந்த தம்பதிக்கு, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
பாதிரியார் விமல்ராஜ், 2 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை கேளம்பாக்கம் அடுத்துள்ள பொன்மார் பகுதியில் குடும்பத்துடன் குடியேறி வசித்து வந்ததுடன், அதே பகுதியில் உள்ள அட்வென்ட் சர்ச்சில் துணை பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.
பெற்றோர் வீடு: சமீப காலமாகவே, தம்பதியிரிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.. கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி, மேடவாக்கம் அருகே உள்ள ஒட்டியம்பாக்கத்தில் தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்த விமல்ராஜ், வைஷாலிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், மருத்துவமனைக்கு காரில் அழைத்து செல்லும்போது உயிரிழந்து விட்டதாகவும், அவரது சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் சொன்னார்.
இதனால், விமல்ராஜ் பெற்றோர், மும்பையில் இருந்த வைஷாலியின் பெற்றோருக்கு தகவலை சொல்லவும் அவர்கள் பதறியடித்து வந்தனர். அப்போதுதான், வைஷாலியின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு, வைஷாலியின் பெற்றோரும், அண்ணன் விஷால்குமாரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு தாழம்பூர் போலீசில் இதுகுறித்து புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில், பாதிரியார் விமல்ராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், பல்வேறு பகீர் தகவலை போலீசாரிடம் கூறினார்.
தகராறுகள்: தங்களுக்குள் எந்நேரமும் கருத்து வேறுபாடும் தகராறும் ஏற்பட்டதால், மனைவியை கீழே தள்ளி, கழுத்தில் காலை வைத்து நெரித்து கொன்றதாக வாக்குமூலம் சொன்னார்.. இதையடுத்து, கொலைவழக்கில் பாதிரியார் விமல்ராஜை போலீசார் கைது செய்தனர். ஆனால், சில நாடகளிலேயே ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் விமல்ராஜ்.
இந்நிலையில், தன்னுடைய மகள் கொலை வழக்கில் மேலும் சந்தேகம் உள்ளதாகவும், அதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் வைஷாலியின் அம்மு மேரி, சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். எனவே, இந்த வழக்கினை கூடுதல் விசாரணை நடத்துமாறு ஹைகோர்ட்டும் உத்தரவிட்டது. பிறகு உடனடியாக சிறப்பு விசாரணை செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் விசாரணையையும் துரிதமாக மேற்கொண்டனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
குழந்தை கண்ணெதிரே: போதை சமாச்சாரம் வைஷாலிக்கு தெரிவதற்கு முன்பிருந்தே, வைஷாலியை பாதிரியாருக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது.. மனைவி வைஷாலி மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி அவரிடம் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாராம் பாதிரியார்..
சம்பவத்தன்று போதை மாத்திரை விவகாரம் தொடர்பாக வைஷாலியுடன் தகராறு நடந்தபோது, 11 மாத குழந்தை கண் முன்பேயே வைஷாலியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்கு பிறகே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மனைவியின் உயிரை காப்பாற்றுவது போல் நாடகம் ஆடி ஊர் மக்களையும் நம்ப வைத்தாராம் பாதிரியார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications