Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏர்போர்ட் மூர்த்தி ஜாமீன் மனுவில் வைத்த வாதங்கள் என்ன.. சென்னை நீதிமன்றம் நிராகரித்தது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி. கடந்த செப்டம்பர் 6-ந் தேதி சென்னை டி.ஜி.பி. அலுவலக நுழைவுவாயில் அருகே நின்று கொண்டிருந்தார். அவரை விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கினர். இதைத்தொடர்ந்து ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தினார். இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

புரட்சி தமிழகம் கட்சி தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அப்படித்தான், கடந்த மாதம் ஏர்போர்ட் மூர்த்தி, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ( திருமாவளவன் எம்பியாக உள்ள தொகுதி) தான் நிற்க தயாராக இருப்பதாக பேசினார். அப்போது திருமாளவளவனை ஒருமையில் கடுமையான வார்த்தைகளில் பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு விசிக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Chennai Primary Sessions Court rejects airport moorthy s bail plea The reason for the Goondas Act

டிஜிபி அலுவலக மோதல்

இதனிடையே கடந்த செப்டம்பர் 6ம் தேதி அன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி சென்று கொண்டிருந்த போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரை செருப்பால் தாக்கினார்கள். இந்தத் தாக்குதலின்போது, ஏர்போர்ட் மூர்த்தி பதில் தாக்குதல் நடத்தினார். அப்போது ஏர்போர்ட் மூர்த்தி, பாதுகாப்பிற்காக வைத்திருந்த சிறு கத்தியால் விசிக நிர்வாகி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இரு தரப்பு மோதலை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தடுக்க முயன்றும் பலன் இல்லை.

விசிக வழக்கில் கைது

இதனிடையே விடுதலை சிறுத்தை கட்சியினர் அளித்த புகாரின் பேரில், ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏர்போர்ட் மூர்த்தி மீது மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர், தொடர்ந்து அவரை செப்டம்பர் 7-ஆம் தேதி கைது செய்தனர். மேலும், அவரை அண்மையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் போலீசார் கைது செய்தனர்.

ஏர்போர்ட் மூர்த்தி வாதம்

இந்நிலையில், ஏர்போர்ட் மூர்த்தி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் எனக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. என்னை தாக்கியது தொடர்பாக நான் அளித்த புகாரின் கீழ், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் யாரையும் போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. ஆனால் தனக்கு எதிராக மட்டுமே கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். பொய் புகாரில் என்னை போலீசார் கைது செய்துள்ளனர். எனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. எனவே, என்னை ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதற்காக, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன்" இவ்வாறு ஏர்போர்ட் மூர்த்தி கூறியிருந்தார்.

குண்டர் சட்டம் காரணம்

இந்த மனுவானது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் காவல்துறை தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், ஏர்போர்ட் மூர்த்தி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி உத்தரவிட்டார்.


ஏர்போர்ட் மூர்த்தி மீது திடீரென குண்டர் சட்டம் ஏன்?

குண்டர் சட்டம் என்பது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைத் சிறைக் காவலில் வைப்பதற்காக போடப்படுகிறது. குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் ஓராண்டுக்கு ஜாமீன் கோர முடியாது. அவர்கள் குண்டர் சட்டம் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தான் முறையிட முடியும். உயர்நீதிமன்றம் தான் ஆய்வு செய்து, காவல்துறை நடவடிக்கை சரியானதா அல்லது தவறானதா என்பதை முடிவு செய்யும்.

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான முக்கிய காரணம், அவர் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்று காவல்துறை நினைப்பது தான். அண்மையில் டிஜிபி அலுவலக வாயிலில் நடந்த மோதல் மட்டுமின்றி, அவர் மீது ஏற்கனவே இருந்த குற்றச்சாட்டுகளும் இந்த முடிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+