கத்தியுடன் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்! மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷுக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை: சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை புற்றுநோய் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, கடந்த 13ம் தேதி அவரது அறையில் விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில், மக்கள் அதிகம் கூடும் மருத்துவமனைக்கு ஆயுதம் எடுத்து வந்து, தாக்குதல் நடத்தியுள்ளார். விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications