53 வயசுல விபச்சாரம்.. சென்னை நெற்குன்றத்தில் வாடகை வீட்டில் தில்லு.. கல்லூரி மாணவர்கள் மட்டுமே குறி
சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லையில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் பாலியல் புரோக்கர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமீபத்தில்தான் 53 வயதில் பெண் ஒருவர் கைதான நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நெற்குன்றத்தில் நடந்துள்ளது.
கடந்த மாதம்கூட கோயம்பேட்டில் பள்ளி மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆந்திர மாநில துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் குமார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.

அதாவது, மாணவியின் அப்பா திடீரென இறந்துவிட்டதால், அவரது அம்மா இன்னொருவரை 2வது திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டாராம். இதனால் தனிமையில் சிக்கிய மாணவி, எங்கே போவது? என்ன செய்வதென்றே தெரியாமல், கே.கே.நகரில் உள்ள, தன்னுடைய அம்மாவின் தோழி பூங்கொடி வீட்டில் சென்று தங்கியிருக்கிறார்.
சினிமாவில் கிளப் டான்சராக உள்ள பூங்கொடி, மாணவியின் நெருக்கடி நிலைமையை புரிந்து கொண்டு, ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்திலும் தள்ளிவிட்டார்.
மாணவியின் பரிதாபம்
வசதிபடைத்த கஸ்டமர்களுக்கு மாணவியை விபச்சாரத்தில் ஈடுபட வைத்து லட்சக்கணக்கிலும் பூங்கொடி சம்பாதித்துள்ளார்.. வசதி படைத்த கஸ்டமர்களை பூங்கொடிக்கு அறிமுகம் செய்து வைத்தது சினிமா காமெடி நடிகர் பாரதி கண்ணன் என்பது தெரியவந்தது.
இறுதியில், பூங்கொடி, ஐஸ்வர்யா, பாரதி கண்ணன், ,உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த கட்டுமான நிறுவன ஊழியர் மகேந்திரன், திமுக நிர்வாகி ரமேஷ் என மொத்த பேரையும் போலீசார் கைது செய்தனர்.. மேலும், பூங்கொடியிடம் நெருங்கி பழகிய பிரபலங்கள் யார் யார்? என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
அதேபோல சைதாப்பேட்டை மசூதி பள்ளம் பகுதியிலும் ஒரு பெண் சிக்கினார்.. இந்த பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு, இரவு நேரங்களில் அடிக்கடி இளைஞர்கள் அதிகளவில் வந்து செல்வதாக புகார்கள் வரவும், போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
53 வயசுல விபச்சாரம்
அந்த குறிப்பிட்ட வீட்டிற்குள் பெண் போலீசாருடன் போலீசார் நுழைந்தனர்.. அந்த வீட்டில் பாலியல் புரோக்கர் புவனேஸ்வரி என்ற 53 வயது பெண், 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததையடுத்து, புவனேஸ்வரியை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இந்நிலையில், மீண்டும் ஒரு பாலியல் சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் நகர், எட்டியப்பன் தெருவிலுள்ள அந்த குறிப்பிட்ட வீட்டிற்குள் பல கல்லூரி மாணவர்கள் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார்கள்.. சந்தேகத்திற்கு இடமான வகையில் அவர்கள் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன..
கல்லூரி மாணவர்களே குறி
இதையடுத்து, நெற்குன்றம் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வீட்டிற்கு மட்டும் அடிக்கடி இளைஞர்கள் வந்து சென்றது தெரியவந்தது.
உடனே போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 55 வயதான பாலியல் புரோக்கர் ராஜா என்பவர், 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானது.
வீட்டை வாடகைக்கு எடுத்து
இதையடுத்து, ராஜாவை சுற்றி வளைத்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.. அப்போது, நெற்குன்றம் பகுதியை சுற்றி அதிகளவில் என்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளதால், அந்த பகுதியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்து வந்ததாகும், என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை குறிவைத்தே, இந்த பாலியல் தொழில் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதுமட்டுமல்ல, இதற்காகவே தனியாக வாட்ஸ் அப் குரூப் அமைத்து, இளம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் புரோக்கர் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம் பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், பாலியலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications