இடுப்பில் துண்டுடன் மாணவிகள் முன்பு வந்து நிற்பார்.. பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் ஆபாச சேட்டைகள்
சென்னை: மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு ஆசிரியர் வந்து நிற்பார் என்ற அதிர்ச்சி தகவலை சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளி அலுமினி பகிரங்க குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளது.
சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவரை பற்றி தான் இப்படி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளியின் டீன் ஷீலா ராஜேந்திரனுக்கு, முன்னாள் மாணவர்கள் அமைப்பு எழுதியுள்ள கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் ஒன்று நெஞ்சை பதற செய்வதாக இருக்கின்றன.

அக்கவுண்டன்சி
அப்படி என்ன சொல்லி உள்ளனர் முன்னாள் மாணவர்கள், இதோ விபரம்: கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் நடத்துபவர் ஆசிரியர் ராஜகோபாலன். 20 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருக்கிறார். ஆனால் மாணவிகளுடன் அவர் மிக மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார். பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவர்களை பயன்படுத்தியுள்ளார்.

ஆபாச கமெண்ட்
பாலியல் தொடர்பாக கமெண்ட் அடித்துள்ளார் . ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையேயான உன்னத உறவை கெடுத்துள்ளார் ராஜகோபாலன். மாணவிகளிடம் பாடம் தொடர்பாக பேசும்போது, இரட்டை அர்த்தத்திலும் பாலியல் தொடர்பாகவும் பேசி அவர்களை தர்மசங்கடத்தில் நெளிய வைத்துள்ளார் . மாணவிகளின் உடல் உறுப்புகள் பற்றி ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளார் ராஜகோபாலன்.

மாணவிகள் பெற்றோர் புகார்
பள்ளி திறந்திருந்தபோது மாணவிகளை தவறான நோக்கத்துடன் உடல்ரீதியாக தொட்டு பேசியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றி மாணவிகள் அவர்களின் பெற்றோர்களிடம் புகார் சொல்லியுள்ளனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து, அவர்கள், புகார் கொடுத்தும் கூட, உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் வெறும் வாய் வார்த்தையில் ராஜகோபாலனை, கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனால் இதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சேட்டைகளை தொடர்ந்துள்ளார். மேலும், இனிமேல் புகார் கொடுத்தால் பாஸ் செய்ய முடியாது என்று மாணவிகளை மிரட்டி உள்ளார்.

இடுப்பில் துண்டு மட்டும்
ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பள்ளி வகுப்புகள் நடந்துள்ளன. எனவே மாணவிகளின் வாட்ஸ் ஆப் நம்பர்களை ராஜகோபாலன் பெற்று வைத்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் போது, இடுப்பில் வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வேறு எந்த உடையும் உடுத்தாமல் மாணவிகள் முன்பாக தோன்றியுள்ளார்.

அட்ரஸ் கூட இருக்கிறது
மாணவிகள் வாட்ஸப் நம்பருக்கு அவர்களின் உடல் அமைப்பு அல்லது பற்றி கமெண்ட் செய்து மெசேஜ் அனுப்பியுள்ளார். தன்னுடன் சினிமா பார்க்க வரும்படி கூட மெசேஜ் அனுப்பி உள்ளார். ராஜகோபாலன் கையில் மாணவிகளின் தொலைபேசி எண்கள் அவர்களின் பெற்றோர்கள் தொலைபேசி எண்கள் முகவரி எல்லாம் இருக்கிறது. இவர்களின் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பொறுப்பு அவரிடம் இருக்கிறது. எனவே வெளியே புகார் தெரிவித்தால் மதிப்பெண்ணை குறைத்து விடுவதாக மிரட்டி வருகிறார் ராஜகோபாலன்.

போஸ்கோ சட்டத்தின்படி குற்றம்
ராஜகோபாலனின், இந்த நடவடிக்கை, முன்னாள் மாணவர்கள் ஆகிய எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இவரது நடவடிக்கைகள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 2012 கீழ் தண்டனைக்குரிய குற்றம். எனவே நாங்கள் பள்ளி மாணாக்கர்களுக்கு முழுவதும் துணை நிற்கிறோம். இவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.

மாணவிகள் அடையாளம் மறைக்கப்பட வேண்டும்
உடனடியாக பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்து விசாரணை துவங்கப்பட வேண்டும். அவர் எந்த ஒரு வகுப்பும் எடுக்காமல் தடுக்க வேண்டும். ஒருவேளை விசாரணை முடிவதற்கு முன்பாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தால் விசாரணை கமிட்டி முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம் வெளியே தெரியாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பை பள்ளி நிர்வாகம் கையிலெடுக்க வேண்டும். அவர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. இவ்வாறு முன்னாள் மாணவர் சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

ராமதாஸ் கண்டனம்
இந்த கடிதத்தை தொடர்ந்து இந்த சம்பவம் பலரது கவனத்தை எட்ட தொடங்கியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! மாணவ, மாணவிகளுக்கு ஒழுங்கு பற்றி பாடம் நடத்தும் பள்ளிகள், தாய், தந்தையருக்கு அடுத்து கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறார்களா? என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்; தவறு செய்தால் தண்டிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். இதேபோல பள்ளியின் பெயர் தேசிய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டு இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் அதில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications