சென்னையில் திருட வந்த வீட்டில் போதையில் மயங்கிய திருடன்.. பொதுமக்கள் கொடுத்த ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்
சென்னை: திருடச் சென்ற போது போதையில் மயங்கி கிடந்த மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்வம் சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் 23வது தெருவில் வசிப்பவர் சேகர் (வயது , இவரது மனைவி ஆனந்தி (வயது 55). கோவைச் சேர்ந்த இந்த தம்பதி ஒரு வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

நேற்று சமையல் வேலைக்கு சென்றுவிட்டு கணவன் மனைவி இருவரும் மாலை வீடு திரும்பினர்.
அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு கடப்பாரையுடன் ஒருவர் போதையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அத்துடன் அந்த தம்பதி கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போதையில் மயங்கி கிடந்தவரை தட்டி எழுப்பி தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடிபோதை ஆசாமியை அழைத்துச் சென்றனர்,
அந்த நபர் யார் என்று விசாரித்த போது, ஆலந்தூர் வஉசி தெருவைச் சேர்ந்த நாகராஜ்(45) என்பதும் வீட்டில் போதையில் திருட வந்த போது மயங்கி விழுந்ததும், இவர் பழைய திருட்டு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை கைது செய்த போலீசார் தொடந்து விசாரித்து வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications