நைட்டி கிழிந்திருந்தது.. தாயை குளிக்க வைத்தபோது மகள் அதிர்ச்சி! சென்னையில் மருது சிக்கியது எப்படி
சென்னை: சென்னையின் இதயப்பகுதியான புளியந்தோப்பில், தனிமையில் இருந்த ஒரு மூதாட்டி மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. 76 வயது பாட்டியின் நிலையை சாதகமாக்கிக்கொண்டு தனது வக்கிர புத்தியைக் காட்டிய 56 வயது நபரை, சென்னை காவல்துறையினர் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது புளியந்தோப்பில்?
சென்னை புளியந்தோப்பு பட்டாளம், கே.எம்.கார்டன் 1-வது தெருவைச் சேர்ந்தவர் அல்லிராணி.. 76 வயதாகிறது.. இவருக்கு ராமச்சந்திரன், முரளிதரன், வாசுதேவன், கருணாநிதி என நான்கு மகன்களும், கீதா என்ற ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 4 பேருமே அதே பகுதியிலேயே தனித்தனியாக வசித்து வருகிறார்கள். மகள் கீதா புரசைவாக்கம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அல்லிராணி - மகள் கீதா
கணவரை இழந்த நிலையில் அல்லிராணி மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வயது முதிர்வு மற்றும் தனிமையால் தவித்து வந்த தாய்க்கு, மகள் கீதா அடிக்கடி நேரில் வந்து தேவையான பணிவிடைகளைச் செய்து கவனித்துக் கொள்வது வழக்கம்.
நேற்று மாலை வழக்கம் போல, அம்மாவை பார்க்க கீதா வந்துள்ளார்.. அப்போது அல்லிராணி அணிந்திருந்த நைட்டி கிழிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பதற்றத்துடன் என்ன நடந்தது? என்று கேட்டுள்ளார்.. ஆனால் வயது முதிர்வு மற்றும் மன அதிர்ச்சி காரணமாக, அல்லிராணியால் எதையும் தெளிவாக சொல்ல முடியவில்லை.
இதனால் குழம்பிப் போன மகள், அம்மாவை குளிக்க வைப்பதற்காக அழைத்து சென்றுள்ளார்.. அப்போதுதான் அவரது உடலில் ஏற்பட்டிருந்த காயங்களையும் மாற்றங்களையும் கண்டு கீதா உறைந்து போனார்.
தாயை குளிக்க வைத்த மகள்
பிறகு தாயிடம் நயமாக பேசியபோதுதான், அந்தப் பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதே பகுதி கே.எம்.கார்டன் 13-வது தெருவைச் சேர்ந்த மருது என்கிற மருதப்பன் (56) என்பவர், நேற்று மதியம் அல்லிராணி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்... வீட்டில் அல்லிராணி எப்போதுமே தனியாக இருப்பதை கண்காணித்து வந்துள்ளார் மருதப்பன்.. நேற்றைய தினம் திடீரென வீட்டிற்குள் நுழைந்து மிரட்டி, பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த தகவலைக் கேட்டுக் கொதிப்படைந்த மகள் கீதா, உடனடியாகத் தனது அம்மாவை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்டார்.
மெடிக்கல் செக்கப்
மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, புளியந்தோப்பு மகளிர் ஸ்டேஷனில் கீதா புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், உடனடியாக மருதுவின் வீட்டிற்கு விரைந்தனர். ஆனால், போலீஸ் வருவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த மருது அங்கிருந்து தப்பியோடினார். அவனது உறவினர்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் மருது செல்போனை எடுக்காமல் தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து, குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. மருதுவின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தீவிரமாகத் தேடியபோது, அவர் கூடுவாஞ்சேரி பகுதியில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.. இதையடுத்து இன்று மதியம் அங்கு விரைந்த போலீசார், தலைமறைவாக இருந்த மருதுவை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு மருது சிக்கியது எப்படி
அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது கைதான மருது பிளம்பர் வேலை செய்து வருகிறாராம்..
12 ஆண்டுகளுக்கு முன்பே மருதுவின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் தனது மனைவியுடன் தனியாக வசிக்க, மற்ற 2 மகன்கள் மருதுவுடனேயே வசித்து வந்துள்ளனர். இத்தனை காலமும் அதே பகுதியில் பிளம்பராக வேலை செய்து வந்ததால், அல்லிராணி அந்த வீட்டில் தனியாக வசிப்பதை நோட்டமிட்டு இந்த அருவருக்கத்தக்கச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதியானது.
தற்போது மருது மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். முதியவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய சமூகத்தில், இத்தகைய வக்கிரச் செயல்கள் அரங்கேறுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது... குழந்தைகளையும், பாட்டிகளையும்கூட விடாத இதுபோன்ற காமுகர்களை என்ன செய்வது???
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications