சென்னையே அதிருது.. புரசைவாக்கம் வீட்டில் "அழகி"..யாரந்த விஐபி? அசிங்கமா மாட்டிக்கிட்டாங்க "சொப்பனா"
சென்னை: வளசரவாக்கம் விபச்சார கும்பலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்த நிலையில், புரசைவாக்க கும்பலையும் கைது செய்துள்ளனர்.. என்ன நடந்தது?
பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதை குற்றமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டும், இந்த தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பாலியல் தொழிலாளர்கள் பல காலமாகவே முன்வைத்து வருகின்றனர்.
அதேசமயம், விபச்சார தொழிலையும் கைவிடாமல் காசு பார்த்து வருகின்றனர்.. சட்டவிரோதமாக இதுபோன்று செயல்படுவோரை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் நம்முடைய போலீசார் இறங்கி வருகிறார்கள்..

ஆடம்பர வாழ்க்கை: ஆனாலும், ஆடம்பர வாழ்க்கை, கையில் நிறைய காசு, போன்றவைகளுக்கு ஆசைப்பட்டு இளம்வயதிலேயே வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்கள் அதிகமாகி கொண்டே வருகிறார்கள். சிலர், இதெல்லாம் தெரிந்தும்கூட, இந்த தொழிலை செய்ய முன்வருகின்றனர்... இப்படித்தான் சென்னை வளசரவாக்கத்தில், ஒரு அப்பார்ட்மென்ட்டில், பிரபல நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த, துணை நடிகை ஒருவர் சிக்கினார்.
முன்னணி நடிகைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 ஆயிரம், துணை நடிகைகளுக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும்... முன்னணி நடிகை தான் வேண்டும் என்றால், ஒரு நாளுக்கு முன்பேயே ரிசர்வ் செய்ய வேண்டுமாம்.. தொழிலதிபர்கள் முதல் இளைஞர்கள் வரை நடிகைகளின் அழகுக்கு ஏற்றபடி விலை நிர்ணயம் செய்து, விபச்சாரம் செய்து வந்திருக்கிறார்.
விபச்சார கும்பல்: 10 நாட்களுக்கு முன்புதான், இந்த கும்பல் சிக்கியது. இந்நிலையில், புரசைவாக்கத்தில் விபச்சார கும்பல் ஒன்று சிக்கி உள்ளது. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, இந்த கும்பலும் அப்பார்ட்மென்ட்டையே தேர்ந்தெடுத்து, விபச்சாரத்தை நடத்தி வந்திருக்கிறது.
புரசைவாக்கம் தானா தெருவில் உள்ளது இந்த அப்பார்ட்மென்ட்.. 3வது மாடியில் உள்ள வீட்டுக்கு, அடிக்கடி இரவு நேரங்களில் மட்டும் சந்தேகப்படும் வகையில் சிலர் வந்துபோவதாக, உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. ஆனால், அப்படி வந்துசெல்கிறவர்களை பார்த்தால், வடமாநில நபர்கள் போலவே இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
அதிரடி கைது: இதையடுத்து, விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், அந்த அப்பார்ட்மென்ட்டின் 3வது மாடியில் உள்ள அந்த வீட்டிற்குள் நைட் நேரத்தில் அதிரடியாக நுழைந்தனர்.. அப்போது, 2 இளம்பெண்களை வைத்து ரகிபுல் இஸ்லாம் என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இவருக்கு 30 வயதாகிறது. அசாம் மாநிலத்தை சேர்ந்த பாலியல் புரோக்கர் இவர்.
இவரை கைது செய்த போலீஸ், அவரிடம் இருந்து, 2 இளம்பெண்களையும் மீட்டு, பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய செல்போன்களையும் பறிமுதல்செய்தனர்.
பெண் தாதா: பிறகு, கைது செய்யப்பட்ட புரோக்கரிடம் விசாரணை ஆரம்பமானது.. இவருக்கு மூளையாக ஒருவர் செயல்பட்டு வருகிறாராம்.. அவர் மும்பையில் பாலியல் புரோக்கராகவே செயல்பட்டு, இந்த துறையில் புகழ் பெற்றவரும்கூட.
அவர் பெயர் ஜலினா பேகம்.. இந்த தொழிலுக்காக சொப்பனா என்று பெயர் மாற்றி கொண்டாராம்.. கடந்த 2 வருடங்களாகவே, ரகிபுல் இஸ்லாம் மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்திருக்கிறார். இதற்காக ஒவ்வொரு வாரமும் 2 முதல் 3 இளம்பெண்களை மும்பையில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைப்பாராம்..
இதில் ஹைலைட் என்னவென்றால், வடமாநில இளைஞர்களுக்காக மட்டுமே இந்த விபச்சாரத்தை நடத்தப்பட்டுள்ளது.. இந்த இளைஞர்களுக்காக மட்டுமே மும்பையில் இருந்து பெண்களை சப்ளை செய்து வந்துள்ளார் சொப்பனா..
அதிரடி கைது: இதையடுத்து, சென்னை போலீஸ் மும்பை விரைந்து, பிரபல பெண் பாலியல் புரோக்கர் ஜலினா பேகம் (எ) சொப்பனாவை கைது செய்து, விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வடமாநில இளைஞர்களுக்காகவே, பாலியல் தொழில் நடந்துள்ளது சென்னையில் பரபரப்பை தந்து வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications