சென்னை அரும்பாக்கத்தில் தீபாவிற்கு எமனாக மாறிய மூடப்படாத மழைநீர் வடிகால்.. பொதுமக்கள் ஆவேசம்
சென்னை: வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னை அரும்பாக்கத்தில் பணிகள் நடந்துள்ளது. அதற்காக தோண்டப்பட்ட மழைநீர் வடிகால்கள் முறையாக மூடப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் முறையாக மூடப்படுவது இல்லை.. அப்படித்தான் மழைநீர் வடிகால் மூடப்படாமல் இருந்துள்ளது. அது கடைசியில் ஒரு பெண்ணுக்கு எமனாக மாறி உள்ளது,
தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை என இரண்டு காலக்கட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு மழை இருக்கிறது. இதில் தென்மேற்கு பருவ மழையால் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். ஆனால் மற்ற மாவட்டங்களில் அவ்வளவாக இருக்காது. ஆனால் வடகிழக்கு பருவ மழை தான் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். குறிப்பாக சென்னைக்கு வடகிழக்கு பருவ மழைதான் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது.

சென்னை மழைநீர்
அதுவே பல நேரங்களில் வில்லனாகவும் மாறிவிடுகிறது. மற்ற ஊர்களில் அதீத மழை விழுந்தால் பாதிப்பு அந்த அளவிற்கு இருக்காது. ஆனால் சென்னையில் அதீத மழை வந்தால் வடிவதற்கு சரியான வடிகால்கள் கிடையாது. இதனால் மொத்த நகரமும் தண்ணீரில் மிதக்கும். இதுதான் பல ஆண்டுகளாக உள்ள எதார்த்தம். அதேநேரம் அரசு, ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயற்கையாக சாலையை உடைத்து மழை நீர் வடிகால்களை உருவாக்கி வருகிறது. அதேபோல் இருக்கும் கால்வாய்களையும் பத்திரப்படுத்தி வருகிறது. பராமரிப்பு பணிகள், புதிய கால்வாய் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பள்ளங்கள் மூடப்படுவது இல்லை
அந்த வகையில் தான் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணி ஆங்காங்கே நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இப்பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.. மேலும், பணிக்காக தோண்டப்படும் பள்ளங்களை பாதுகாப்பான முறையில் மூட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் சில இடங்களில் பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பது நடக்கிறது.
கயிறு கட்டி மீட்பு
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி இரவு அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1-வது தெருவில் உள்ள மூடப்படாத மழைநீர் வடிகால்வாயில் பெண் ஒருவர் கிடப்பதை பொதுமக்கள் கண்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூளைமேடு போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கயிறு கட்டி உடலை மீட்டு கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
போலீசார் சந்தேகம்
அதில், பிணமாக மீட்கப்பட்டவர் சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயதாகும் தீபா என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட பெண், மூடப்படாமல் இருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் அடிபட்டும், பள்ளத்தில் கிடந்த தண்ணீரில் மூழ்கியும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தீபா எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.
அதிகாரிகள் அலட்சியம்
இதற்கிடையே, அதிகாரிகளின் அலட்சியமே பெண்ணின் இறப்புக்கு காரணம் என கூறி, அரும்பாக்கம் மக்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் முறையிட்டனர். மேலும், இந்த பகுதியில் மின்விளக்குகள் எரியாததால் பள்ளம் தெரியாமல் அந்த பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள்.
நடவடிக்கை உறுதி
இதனையடுத்து, அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு வருடம் முன்பு பிரபல தமிழ் செய்தி ஊடகத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர், மூடப்பட்டாத மழைநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்தார். அதேபோல் வெவ்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக இருக்கிறது.
-
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
சவுதி வானில் அடுத்த அதிர்ச்சி! பீதியில் அஞ்சி ஓடும் பொதுமக்கள்! வளைகுடா நாட்டில் எதிர்பாராத பாதிப்பு -
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
விஜயின் தவெகவிற்கு ‘செக்'.. சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்.. ரெடியான 5 லட்சம் பேர் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்












Click it and Unblock the Notifications