சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி - வீட்டிற்குள் சிக்கித்தவிப்பவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்பு

நிவர் புயல் தாக்கத்தினால் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. பல பகுதிகளிலும் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ளது. வேளச்சேரி வெள்ளத்தில் மிதக்கிறது. வீட்டிற்குள் சிக்கியுள்ள

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயலின் தாக்கத்தினால் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. சாலைகளில் வெள்ளநீர் ஆறாக ஓடுகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளன. வேளச்சேரி வெள்ளச்சேரியாக மாறியுள்ளது. வீட்டிற்குள் சிக்கியுள்ள மக்களை ரப்பர் படகுகளைக் கொண்டு மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர்.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் இன்னும் சில மணிநேரங்களில் கரையை கடக்கப் போகிறது. கரையை கடந்த பின்னரும் ஆறு மணிநேரம் கோரத்தாண்டவமாடும் என்று எச்சரித்துள்ளது வானிலை மையம். பல மாவட்டங்களில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chennai rain Flood in Velachery - Rescue of those trapped inside the house by rubber boats

நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நிவர் புயல் மையம் கொண்டுள்ளதால் சென்னையில் பெய்து மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலைகளில் ஆறுகளாக வெள்ளநீர் ஓடுகின்றன.

தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் குளமாக தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மழைநீரில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் நேற்று முதலே இருளில் தவிக்கின்றனர் தலைநகரவாசிகள்.

நிவர் வந்தா எனக்கென.. மொட்டை மாடியில் குளுகுளுன்னு நனைந்த சாக்ஷி! நிவர் வந்தா எனக்கென.. மொட்டை மாடியில் குளுகுளுன்னு நனைந்த சாக்ஷி!

சென்னையில் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளன. முழக்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Chennai rain Flood in Velachery - Rescue of those trapped inside the house by rubber boats

வேளச்சேரி வெள்ளச்சேரியாக மாறியுள்ளது. பல பகுதிகளில் கழுத்தளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். ரப்பர் படகுகளைக் கொண்டு பொதுமக்களை மீட்டுக்கொண்டு வந்து முகாம்களில் தங்க வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Recommended Video

    முட்டிக்கு மேல் வெள்ளநீர்.. சென்னை புறநகர் பகுதிகளின் தற்போதைய நிலை - வீடியோ

    English summary
    Due to the impact of Nivar cyclone, heavy rain is pouring in Chennai and suburbs. Many areas have been inundated by two days of torrential rains. Roads are flooded. Water has seeped into the houses. Velachery has become a floodplain. Rescuers are using rubber boats to rescue people trapped inside the house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X