இந்த சுவர்கள் இன்னும் எத்தனை பிரச்சனைகளை உண்டாக்க போகுதோ.. சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு இஷ்டத்திற்கு அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்கள் பல இடங்களில் வெள்ள பாதிப்புக்கு காரணமாக அமைந்தன. சில இடங்களில் தடுப்பு சுவர் இல்லாததும் வெள்ள பாதிப்புக்கு காரணமாக அமைந்தன.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் அன்று பெய்த கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், பல பாடங்களையும் கற்றுக் கொடுத்துவிட்டு சென்றுள்ளது. யாரெல்லாம் நீர் நிலைகளில் வீடு கட்டினார்களோ, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டினார்களோ, இடங்கள் வாங்கி போட்டார்களோ அத்தனை பேருக்கும் மறக்க முடியாத பாடத்தை கற்று தந்துவிட்டு சென்றுள்ளது.

Chennai rains and surrounding walls are important lessons taught to the people

இயற்கையை தடுக்க எந்த சக்தியாலும் முடியாது என்பதை சென்னை மழை வெள்ளம் உணர்த்தி உள்ளது. சென்னை வெள்ளம் கற்றுக்கொடுத்த முக்கியமான ஒரு பாடத்தை பற்றித்தான் நாம் பார்க்க போகிறோம்..

சென்னை பள்ளிக்கரணை, கீழ்கட்டளை, பல்லாவரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், காரப்பாக்கம், புழுதிவாக்கம், பெருங்குடி, தரமணி, போன்ற பகுதிகளில் வெள்ள பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து கள ஆய்வு செய்த போது பல இடங்களில் ஏரி தண்ணீர் உடைந்து வெளியேறியது தான் முக்கிய காரணம் என்பது தெரிந்தது. அதேநேரம் அதிகப்படியான மழையால் வெள்ள நீர் வரும் போது, அது வெளியேறுவதற்கு கால்வாய்களை தாண்டி இயற்கையாக சில இடங்களில் வழிகள் இருந்திருக்கும்.

அந்த பாதைகள், வழித்தடங்கள் நீர் வழித்தடங்களாகவே பல ஆண்டுகள் இருந்தவை. இவை அனைத்தும் கடந்த 30 ஆண்டுகளில் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டாவும் வாங்கப்பட்டன. இதனால் அதிகப்படியான தண்ணீர் வெளியேறும் போது அவை நேரடியாக அந்த வழிகளை அடைத்து நிற்கின்றன. அவை தான் பல இடங்களில் தண்ணீர் இடுப்பு அளவிற்கு மேல் தேங்க காரணமாக இருந்தன. சில இடங்களில் தண்ணீர் உள்ளே வீட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக கட்டப்பட்ட தடுப்பு சுவர்களே வெள்ளம் வெளியேற வழியில்லாமல் அவர்களுக்கு வில்லானாக மாறியது. பொதுவாக ஏரியை ஒட்டிய பகுதிகளில் தண்ணீர் வேகமாக வெளியேறும்.

அந்த இடங்களில் வீடுகளை சுற்றி தடுப்பு சுவர் அமைக்கும் போது, அந்த தடுப்புசுவர்களை கடந்தால் மட்டுமே தண்ணீர் வேறு பகுதிக்கு போக முடியும் என்ற நிலை உருவாகுகிறது. ஆனால் தடுப்பு சுவர் தண்ணீரை அடைத்தால் அவற்றை நிரம்பி அதன்பின்னரே தண்ணீர் வெளியேறியது .

அதேநேரம் தென் சென்னை முழுவதுமே பல வீடுகளின் தடுப்பு சுவர்களை உடைத்துக் கொண்டு தண்ணீர், வெளியேறி ஏரிக்கும் கால்வாய்களுக்கும் அதிரடியாக சென்றுவிட்டது. இவ்வளவு தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்காத மக்கள், தடுப்பு சுவர்களை இழந்ததுடன், கார்கள், பைக்குகளையும் பறிகொடுத்தனர். கீழ்தளம் முழுமையாக சேதத்தை சந்தித்தது.

தென்சென்னை முழுவதும் நேரடி ஆய்வின் போது தடுப்பு சுவர்களால் ஏற்பட்ட பாதிப்பு தெரிந்தது. அதேநேரம் மழைநீர் செல்ல வேண்டிய கால்வாய்களை சுற்றி சில இடங்களில் தடுப்பு சுவர்கள் இல்லாததும் வெள்ள நீர் ஊருக்குள் வர காரணமாக இருந்தது. எனவே அசாதாரண நேரங்களில் வெள்ளம் வெளியேற வழிகளை நாம் உருவாக்கி வைக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்து இடங்களையும் கண்டுபிடித்து அந்த தண்ணீர் வெளியேற வழிவகைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். அப்படி செய்யாதவரை இந்த பிரச்சனைகள் தொடரத்தான் செய்யும் என்பது கசப்பான உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+