பொறிவைத்து காத்திருந்த புருஷன் பொண்டாட்டி! பக்கத்து வீட்டுக்குள்ள போய்:ஒரே அசிங்கமா போச்சு குமாரு!
சென்னை: சென்னை ராமபுரத்தில் வீட்டின் பூட்டை உடைக்காமல், லாவகமாக கைவரிசை காட்டிய கொள்ளையனை, வீட்டுக்குள் மறைந்து இருந்து, மனைவியுடன் சேர்ந்து பொறி வைத்து வைத்து பிடித்துள்ளார் ஆட்டோ டிரைவர்.
சென்னை ராமாபுரம், அன்னை சத்யா நகர், 4-வது தெருவில் வசித்து வரும் 40 வயதாகும் நல்லசிவம், அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அண்மையில் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்று இருந்தார். இரவு வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல் அடுத்தடுத்து 3 முறை அவரது வீட்டில் இருந்து சுமார் ரூ.20 ஆயிரம் வரை நல்ல சிவம் வீட்டில் திருடுபோய் இருந்தது. வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்படாமல் அப்படியே உள்ளே புகுந்து யாரோ திருடி இருப்பதும் நல்லசிவத்துக்கு தெரியவந்தது.
வீட்டில் இருந்து ஆட்கள் வெளியே சென்றதும், அதனை நோட்டமிட்டு மர்மநபர் சில நிமிடங்களில் கொள்ளை அடித்து விட்டு எஸ்கேப் ஆவதும் தெரியவந்தது. இதையடுத்து நல்ல சிவம் வீட்டில் தொடர்ந்து கைவரிசை காட்டிவரும் கொள்ளையனை கையும் களவுமாக பொறி வைத்து பிடிக்க முடிவு செய்து இதுபற்றி தனது மனைவியிடம் தெரிவித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கொள்ளையனை பிடிக்க திட்டமிட்டமிட்டார்கள்
பின்னர் இருவரின் யோசனைப்படி சம்பவத்தன்று நல்லசிவம் வீட்டுக்குள் மறைந்து இருந்து கொண்டு, மனைவியை மட்டும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே செல்லுமாறு கூறினார். அதன்படி வழக்கம்போல் நல்லசிவத்தின் மனைவி வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு எதுவும் தெரியாததுபோல வெளியே சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் அங்குவந்த மர்மநபர் ஒருவர், நல்லசிவம் வீட்டின் பூட்டை உடைக்காமல் லாவகமாக கதவை திறந்து உள்ளே சென்றார். வீட்டுக்குள் மறைந்து இருந்த நல்லசிவம், கொள்ளையன் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் உரிமையாளர் இருப்பதை பார்த்து திடுக்கிட்ட கொள்ளையன், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளான்.

பல நாள் திருடன் ஒரு நாள் சிக்கியதால் ஆவேசம் அடைந்த நல்லசிவம், பாய்ந்து சென்று கொள்ளையைனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினரும் கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பிடிபட்ட கொள்ளையன் யார் என்று பார்த்தால் நல்லசிவத்தின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசிக்கும் மணிகண்டன்(26) என்பது கண்டுபிடிக்கப்பபட்து. அவரை ராமாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
போலீசார் மணிகண்டனிம் நடத்திய விசாரணையில், இளநீர் வியாபாரம் செய்து வந்த மணிகண்டனுக்கு. ஜாலியாக இருக்க பணம் போதவில்லையாம். இதனால் அருகில் இருந்த வீட்டில் திருடி செலவு செய்ய விரும்பி இருக்கிறார். இதற்காக நல்லசிவம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதும் மணிகண்டன், பூட்டை உடைக்காமல் பூட்டை பிடித்து இழுத்து கதவை லாவகமாக திறந்து வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக வீட்டில் இருந்த பணம் சிறுக சிறுக மாயமானதால் நல்லசிவமும், அவருடைய மனைவியும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் அடைந்திருக்கிறார். அதன்பிறகு தொடர்ந்து பணம் மாயமானதால் வெளியில் இருந்து வந்த திருடனே திருடியிருக்கிறார் என்று கண்டுபிடித்து, அவரை பொறி வைத்து பிடித்து இருக்கிறார்கள். கைதான மணிகண்டன், நல்லசிவம் வீட்டில் 3 முறை கைவரிசை காட்டி இருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications