பேச மாட்டியா? சென்னை மாணவியின் கையிலென்ன? கேமராவை பார்த்து திகைத்த ராமாபுரம் போலீஸ்.. செம ட்விஸ்ட்
சென்னை ராமாபுரத்தில் கல்லூரி மாணவி பிளேடால் மர்ம நபர்கள் அறுத்ததாக அளித்த புகாரில் திடீர் திருப்பமாக, காதலன் பேசாமல் இருந்ததால் நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் அந்த 17 வயது மாணவி.. ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், பி.டெக். படித்து வருகிறார். இவர் நேற்றைய தினம் காலேஜ் அருகே நின்றுகொண்டிருந்த போது, திடீரென அலறி துடித்தார்.

முகமூடி நபர்கள்: முகமூடி அணிந்த நபர்கள் சிலர், தன்னை பிளேடால் கிழித்துவிட்டதாக கூறி கதறினார்.. இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிப்போய், மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை தந்தனர். பிறகு சிகிச்சை முடிந்து வீட்டிற்கும் பத்திரமாக அனுப்பி வைத்தார்கள்.
தங்கள் மகளின் கையில் பிளேடால் கிழித்ததை அறிந்து கொந்தளித்த பெற்றோர்கள், உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் தந்தனர்.. சம்பந்தப்பட்ட மர்மநபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
விசாரணை: இதையடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டார்கள்.. அப்போது மாணவி, முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.. பிறகு, காலேஜ் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.. ஆனால், மாணவி சொன்னபடி, எந்த மர்மநபர்களுமே அந்த பகுதிக்கு வரவில்லை என்பது உறுதியானது..
இதனால் சந்தேகமடைந்த போலீசார், மாணவியிடமே கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டார்கள்.. அப்போதுதான் மாணவியின் குட்டு வெளிப்பட்டது.
மாணவி: அதாவது, மாணவி ஒரு இளைஞரை காதலித்து வருகிறாராம்.. அந்த இளைஞர், மாணவியிடம் கடந்த சில நாட்களாகவே பேசாமல் இருந்திருக்கிறார்.. அவர் பேசாமல் இருப்பதை தாங்கி கொள்ள முடியாத மாணவி, தன்னிடம் எப்படியாவது அவரை பேச வைத்துவிட வேண்டும் முடிவு செய்துள்ளார்.. இதற்காகவே, தன்னைத்தானே பிளேடால் கிழித்துக்கொண்டு நாடகமாடினாராம் மாணவி.. இதையடுத்து மாணவிக்கு போலீசார் புத்திமதி சொல்லியிருக்கிறார்கள். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.












Click it and Unblock the Notifications