சாலை விபத்து உயிரிழப்புகளை தடுப்பதில் நாட்டிலேயே சென்னை முதலிடம்! மத்திய அரசின் ஆய்வறிக்கை தகவல்!
சென்னை: சாலை விபத்து உயிரிழப்புகளை தடுப்பதில் நாட்டிலேயே சென்னை முதலிடம் வகிப்பதாக மத்திய அரசின் சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே சென்னை மாநகரத்தில் தான் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்திருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல் விபத்துக்களின் தீவிரத் தன்மையை எடுத்துக்கொண்டால் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைந்த விபத்துக்களே நிகழ்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவிலேயே சாலை விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படக் கூடிய மாநிலம் உத்தரப்பிரதேசம் என்றும் நாடு தழுவிய அளவில் எடுத்துக்கொண்டால் 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டு 15% விபத்துக்கள் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு நாடு முழுவதும் 3.84 லட்சம் விபத்துக்கள் பதிவாகியிருந்த நிலையில் 2022ஆம் ஆண்டு 4.44 லட்சம் விபத்துக்கள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துக்களுக்கு 72.4% அதி வேகத்தில் வாகனங்களை இயக்கியதே காரணம் எனவும் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விபத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததற்கு 75.2% அதிவேகமாக வாகனங்களை இயக்கியதே எனக் கூறப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் பள்ளம் மேடு, வளைவு சாலை, பாலங்களை காட்டிலும் நேரான தேசிய நெடுஞ்சாலையில் தான் அதிகளவில் விபத்துக்கள் நிகழ்ந்திருப்பது தான்.
கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,68,491 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான தகவலையும் மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் நிம்மதியடைய வேண்டிய தகவல் என்னவென்றால், இந்தியாவிலேயே சென்னை மாநகரத்தில் தான் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்திருப்பது என்பதும் விபத்துக்களின் தீவிரத் தன்மையை எடுத்துக்கொண்டால் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைந்த விபத்துக்களே நிகழ்ந்திருப்பதுமாகும்.
சாலை விபத்துக்களை முற்றிலும் தடுக்கும் வகையில் போக்குவரத்து காவலர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு முன்னெடுத்து வருவதும் முதலமைச்சர் கொண்டு வந்த இன்னுயிர் காப்போம் என்ற திட்டமும் நல்ல பலனை கொடுக்கத் தொடங்கியிருப்பது மத்திய அரசின் ஆய்வறிக்கை தகவல் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்!












Click it and Unblock the Notifications