2016 vs 2026.. கூடுவாஞ்சேரி டூ அய்யப்பன் தாங்கல்.. ஒரு கிரவுண்ட் இருந்தால் கோடிகளில் லாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த 10 வருடங்களில் நிலத்தின் மதிப்பு மிக கடுமையாக உயர்ந்துள்ளது.. 2016-ம் ஆண்டில் மயிலாப்பூர் மற்றும் அண்ணா நகர் போன்ற பாரம்பரியமிக்க பகுதிகளில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் ஒரு பகுதியாக 1000 சதுர அடியை வாங்குவது ஓரளவிற்குச் சாத்தியமாக இருந்தது. ஆனால் கோடிகளை கொட்டினாலும் வாங்க முடியாது. கூடுவாஞ்சேரி மக்கள் எல்லாம் கனவிலும் நினைக்காத அளவிற்கு உயர்வை சந்தித்துள்ளார்கள். தங்கம் மட்டுமே உயர்ந்துவிட்டதாக பலரும் நினைக்கும் நிலையில், தங்கத்தைவிட அதிக அளவில் வருமானம் ஈட்டி தரும் விஷயமாக நிலம் இன்றும் நீடிக்கிறது. சென்னையில் 2016ல் சதுர அடி என்ன விலை.. இப்போது 2026ல் என்ன விலை என்று பார்ப்போம்.

அந்த காலத்தில் பணம் நன்கு சம்பாதித்தவர்கள், சென்னை மற்றும் புறநகரில் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு கிரவுண்ட் வாங்கி போட்டிருந்தால், அவர்களின் சொத்து மதிப்பு, அவர்கள் பல தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு கோடிகளை கொடுத்திருக்கும்.. ஏன் ஒரே ஒரு இடத்தில் இடம் வாங்கி போட்டிருந்தால் கூட ஒரு தலைமுறையே வேலைக்கே போகாமல் காலம் முழுக்க சாப்பிட்டு சந்தோஷமாக வாழ முடியும். அந்த அளவிற்கு நிலத்தின் மதிப்பு சென்னை மற்றும் புறநகரில் அதிகரித்துள்ளது.

Chennai Real Estate 2016 vs 2026 Which areas saw the biggest jump Current 1000 Sq ft rates

சென்னையில் எந்த பகுதியில் 2016ல் 1000 சதுர அடி என்ன விலை.. இப்போது 2026ல் என்ன விலை என்று பார்ப்போம். இது தோராயமான அளவு தான்.. ரியாலிட்டிபடி பார்த்தால் இன்னமும் அதிகமாக இருக்கும். குறிப்பாக நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கூடுதலாகவே இருக்கும். முகப்பேரில் 2016ல் 1000 சதுர அடி நிலம் 45லட்சமாக நிலத்தின் மதிப்பு இருந்தது. இப்போது 10 வருடங்களில் 1.5 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும் முக்கிய சாலையில் 2 கோடி வரை போகிறதாம். அதேபோல் 2016ல் 6லட்சமாக இருந்த ரெட் ஹில்ஸ் நிலமதிப்பு இப்போது 25 லட்சமாக உயர்ந்துள்ளது.மெயின்ரோட்டில் 40 லட்சம் வரை கூட போகிறது என்கிறார்கள்.

2016ல் 1000 சதுர அடி நிலம் 25 லட்சமாக இருந்தது... ஆனால் 2026ல் 75 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல் கொளத்தூரில் 2016ல் 23 லட்சமாக இருந்த நிலத்தின் மதிப்பு, 2026ல் 70 லட்சமாக உயர்ந்துள்ளது. அய்யப்பன்தாங்கலில் 19 லட்சமாக இருந்த நிலத்தின் மதிப்பு 50 லட்சமாக 2026ல் உயர்ந்துள்ளது. ஆனால் முக்கிய சாலையில் ஒரு கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது என்கிறார்கள் பொதுமக்கள்.

அதேபோல் கொட்டிவாக்கத்தில் 75 லட்சமாக இருந்த 1000 சதுர அடி நிலம், இப்போது 1.5 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. பாலவாக்கத்தில் 58 லட்சமாக இருந்த நிலத்தின் மதிப்பு, 10 வருடத்தில் அதிரடியாக உயர்ந்து 1.4 கோடியாக இருக்கிறதாம். அதன் பக்கத்தில் உள்ள உத்தண்டியில் 2016ல் ஆயிரம் சதுர அடி நிலம் 35 லட்சமாக இருந்தது. இன்று 1 கோடியாக உயர்ந்துள்ளதாம்.பள்ளிக்கரணையில் 2016ல் 16 லட்சமாக இருந்த நிலத்தின் மதிப்பு 60 லட்சமாக போகிறதாம்.சிறுசேரியில் 10 லட்சமாக இருந்த நிலத்தின் மதிப்பு 35 லட்சமாக போகிறதாம்.

அதேபோல் 2016-ம் ஆண்டில் மயிலாப்பூர் மற்றும் அண்ணா நகர் போன்ற பாரம்பரியமிக்க பகுதிகளில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் ஒரு பகுதியாக 1000 சதுர அடியை வாங்குவது ஓரளவிற்குச் சாத்தியமாக இருந்தது; அப்போது அங்கு ஒரு சதுர அடி 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இருந்தது. ஆனால் 2026-ல், நிலத் தட்டுப்பாடு மற்றும் மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணிகளின் வருகையால், அதே மயிலாப்பூரில் 1000 சதுர அடி நிலத்தின் மதிப்பு 4 கோடி ரூபாயைத் தாண்டி நிற்கிறது. இதே நிலைதான் அண்ணா நகரிலும், இன்று அங்கு ஒரு சதுர அடி 35,000 ரூபாய்க்கும் மேல் விற்பனையாவதால், அது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.

கடற்கரை ஓரப்பகுதியான திருவான்மியூர் மற்றும் போக்குவரத்து மையமான கோயம்பேடு ஆகிய இடங்கள் 2016-ல் சுமார் 8,000 முதல் 12,000 ரூபாய் என்ற விலையில் இருந்தன. ஆனால் இன்று கோயம்பேடு ஒரு மிகப்பெரிய வர்த்தக மையமாகவும், திருவான்மியூர் ஒரு பிரீமியம் குடியிருப்புப் பகுதியாகவும் மாறியுள்ளதால், அங்கு 1000 சதுர அடி நிலம் 2.5 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை எகிறியுள்ளது.

தகவல் தொழில்நுட்பப் பாதையான (OMR) சோழிங்கநல்லூர் மற்றும் வளர்ந்து வரும் போரூர் பகுதிகளில் 2016-ல் 5,000 முதல் 6,000 ரூபாய்க்கு கிடைத்த நிலம், இன்று மெட்ரோ இணைப்பு மற்றும் புதிய மேம்பாலங்கள் காரணமாக 1.2 கோடி ரூபாய்க்கு மேல் தாராளமாக விற்பனையாகிறது.

மிகவும் ஆச்சரியமான வளர்ச்சி என்னவென்றால், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றம்தான். 2016-ல் ஒரு சதுர அடி 2,000 ரூபாய்க்குக் குறைவாக இருந்த கூடுவாஞ்சேரி போன்ற இடங்களில், இன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் ஜி.எஸ்.டி சாலையின் அபரிமிதமான வளர்ச்சியால் விலை மும்மடங்கு உயர்ந்துவிட்டது. அப்போது 20 லட்சத்திற்குள் கிடைத்த 1000 சதுர அடி நிலம், இன்று 60 லட்சம் ரூபாயைத் தொட்டு நிற்கிறது. தாம்பரமும் அதன் சுற்றுவட்டாரமும் இன்று ஒரு துணை நகரமாகவே மாறிவிட்டதால், அங்கு ஒரு சதுர அடி 10,000 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில், கடந்த பத்து ஆண்டுகளில் சென்னை நகருக்குள் சொத்து வைத்திருப்பவர்களின் மதிப்பு இரு மடங்காகவும், வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் நான்கு மடங்காகவும் பெருகியிருக்கிறது என்பதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+