லண்டனுக்கு சுற்றுலா.. சிறப்பாக பணியாற்றிய 1,000 ஊழியர்களுக்கு சென்னை நிறுவனம் தந்த வாய்ப்பு.. செம
சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு நம் நாட்டிலும், துபாயிலும் செயல்பட்டு வரும் பிரபலமான தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது ஊழியர்கள் 1,000 பேரை லண்டனுக்கு ஒரு வாரம் டிரிப் அழைத்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அதன் ஊழியர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி நம் நாட்டின் முன்னணி நகரங்கள் மற்றும் துபாயில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளை இந்த நிறுவனம் கட்டி வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் மொத்தம் 7,000 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அந்த நிறுவனம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி சிறப்பாக பணியாற்றிய 1,000 ஊழியர்களை முழு செலவில் ஒருவாரம் லண்டனுக்கு அழைத்து செல்ல உள்ளது. அதாவது அந்த நிறுவனம் தனது வருடாந்திர லாப பங்கு போனஸாக ஊழியர்களுக்கு இதனை செய்கிறது. இந்த பயணத்தில் இந்தியா மற்றும் துபாயில் பணியாற்றும் 1,000 ஊழியர்கள் செல்ல உள்ளனர். இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதமாகும்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது ஊழியர்கள் லண்டனில் உள்ள செயிண்ட் பால்ஸ் கதீட்ரல், லண்டன் பாலம், பிக் பென், பக்கிங்ஹாம் அரண்மனை, பிக்காடில்லி சர்க்கஸ், டிராஃபல்கர் சதுக்கம், மேடம் துசாட்ஸ் போன்ற புகழ்பெற்ற இடங்களைப் பார்வையிட உள்ளனர். அதுமட்டுமின்றி பிரபலமான தேம்ஸ் நதியில் கப்பல் பயணமும் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த நிறுவனம் தனது ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இப்படி வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வது இதுமுதல் முறையல்ல. இதற்கு முன்பும் இப்படி நடந்துள்ளது. மொத்தம் 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் இப்போது 1000 பேர் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சுற்றுலா செல்ல உள்ளனர்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது அனைத்து ஊழியர்களும் சமமாக நடத்தப்பட உள்ளனர்கள். அவர்களுக்கான பயண டிக்கெட், தங்கும் இடம் உள்ளிட்டவற்றில் எந்த பாகுபாடும் காட்டப்படாது. இது அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான அருண் கூறுகையில், ‛‛நாங்கள் எங்களின் வளர்ச்சி மற்றும் வெற்றியை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்களின் செல்வத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திட்டத்தில் பலரும் முதல் முறையாக வெளிநாடு செல்கின்றனர். இன்னும் சிலர் வெளிநாடு சென்று வந்த அனுபவம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இப்படியான சூழலில் இந்த பயணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்'' என்றார்.












Click it and Unblock the Notifications