புயல் வெள்ளத்தால் சேதம் அடைந்த சென்னை சாலைகள்.. மொத்தமாக மாறுது.. வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்
சென்னை: சென்னையில் தொடர் மழை வெள்ளம் முடிந்து உள்ள நிலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலான சாலைகளை மீண்டும் போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் கடந்த 2023 நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.

சென்னை பாதிப்பு ஏன்?: சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் நகர தொடங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் புயலின் வேகம் 10 கிமீ தான். அதாவது 1 மணி நேரத்திற்கு 10 கிமீ தூரம் மட்டுமே நகரும்.
அதே சமயம் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதாவது கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் சென்னைக்கு வடக்கு திசையில் புயல் தூரமாக சென்றாலும் கிழக்கு திசையில் அது அருகில் இருந்து கொண்டே இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த புயல் கிட்டத்தட்ட 17 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே இருந்தது. சென்னைக்கு அருகே 100 -200 கிமீ தூரத்திலேயே புயல் இருந்தது.
அதுதான் சென்னைக்கு பெரிய சிக்கலாகி மாறியது. 100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை புரட்டி எடுத்து வெள்ளத்தை ஏற்படுத்தியது.
Greater Chennai Corporation is enhancing road infrastructure for safer and smoother vehicular movement. BC roads are being relaid in crucial areas like Gandhi Nagar Canal Bank Road, Balakrishna Street, Janaki Avenue, and Ashtalakshmi Garden.#ChennaiCorporation #Heretoserve pic.twitter.com/Vjez06uYvf
— Greater Chennai Corporation (@chennaicorp) January 23, 2024
சாலை சீரமைப்பு பணி: சென்னையில் தொடர் மழை வெள்ளம் முடிந்து உள்ள நிலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உடனுக்குடன் குழிகள் மூடப்படுகின்றன. தற்போது புதிய சாலைகளை போட தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் அனைத்தையும் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படியே பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின்: முன்னதாக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல.
மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ இரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகளின் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற்றப்படவேண்டும். நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும். இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை. மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்., என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications