ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ்... சென்னையை நோக்கி படையெடுக்கும் வாகனங்களால் கடும் நெரிசல்
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இ பாஸ் வழங்கப்படுவது எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையை நோக்கி வாகனங்கள் படையெடுப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனாலும் மாவட்டங்களிடையேயான போக்குவரத்துக்கு இ பாஸ் அவசியம் என்கிற நடைமுறை பின்பற்றப்பட்டது.

இந்த இ பாஸ் விவகாரம் பெரும் பிரச்சனையாக வெடித்தது. இ பாஸ் பொதுவாக யாருக்கும் கிடைக்கவில்லை; பணம் கொடுத்தால்தான் கிடைக்கிறது என்கிற புகாரும் எழுந்தது. இதனால் இ பாஸ் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்ற தமிழக அரசு ஆகஸ்ட் 17-ந் தேதி முதல் இ பாஸ் நடைமுறைகளில் தளர்வை அமல்படுத்தியது. இதனால் நேற்று ஒரே நாளில் மொத்தம் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் கிடைத்தது.
இ பாஸ் எளிதாக கிடைப்பதால் சென்னைக்கு திரும்பி வருவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாததால் வாகனங்கள் மூலம்தான் சென்னைக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் சென்னை வரும் சாலைகள் அனைத்தும் வாகனங்களால் நிறைந்து காணப்பட்டது.
சுங்க சாவடிகளில் வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலைதான் இருந்தது. பல இடங்களில் வாகனப் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications