Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்க்கவே பயங்கரமா இருக்கே.. வயதான தம்பதியிடம் வேகமாக ஓடிய ராட்வீலர் நாய்.. இரவில் ஆடிப்போன சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை:ராட்வீலர் உள்ளிட்ட 23 வெளிநாட்டு வகை நாய்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.. தடை செய்யப்பட்ட நாய்களால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல முறை மாநகராட்சி சார்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. அப்படியிருந்தும்கூட, வீடுகளில் விரும்பி வளர்க்கும் நாய்கள் சிலவற்றினால், பொதுமக்களுக்கு இன்னல்களும், ஆபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னையில் வயதான தம்பதியினரை, ராட்வீலர் நாய் ஒன்று விரட்டி கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. என்ன நடந்தது தம்பதிக்கு?
சென்னை புழல் அருகே புத்தகரம் ராஜம்மாள் நகரை சேர்ந்தவர் மாரியப்பன்.. இவருக்கு 72 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் அன்னக்கிளி... கடந்த 31ம் தேதி நள்ளிரவு 11:30 மணியளவில், மாரியப்பன் வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்..

Chennai rottweiler dog elderly couple

அப்போது அந்த பகுதியில் வசிக்கும் வக்கீல் கவியரசனும், தான் வளர்க்கும் ராட்வீலர் நாயை வெளியே வாக்கிங் அழைத்து வந்துள்ளார்.. அப்போது நாய்க்கு சங்கிலி எதுவுமே கட்டாமல் அழைத்து வந்தார்.

தகாத வார்த்தைகள்

திடீரென எதிரே நின்ற அவ்வளவு பெரிய நாயை பார்த்ததும் பயந்து போன மாரியப்பன், இது குறித்து கவியரசனிடம் கேட்டுள்ளார்.. இவர்கள் இருவரின் சத்தத்தை கேட்டு, வீட்டிற்குள்ளிருந்து அன்னக்கிளியும் வெளியே வந்திருக்கிறார்.. சங்கிலி இல்லாமல் நாயை வெளியே அழைத்து வந்தது குறித்து, மாரியப்பன் கேட்டதற்கு, கவியரசன் ஆவேசமடைந்துள்ளார். இதனால் மாரியப்பனை தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறார்..

அப்போது எதிர்பாராத விதமாக, அங்கிருந்த நாய், வயதான தம்பதி மீது கடிக்க பாய்ந்துள்ளது. ஆனால், அப்போதும் கவியரசன் நாயை தடுக்காமல் நின்றிருக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன்னுடைய நாயை ஏவிவிட்டு வயதான தம்பதியை மீண்டும் மீண்டும் கடிக்க வைத்து அவர்கள் கதறுவதையும், அழுது புலம்புவதையும் கண்டு ரசித்துள்ளார்.

அலறி துடித்த தம்பதி

அந்த நாயோ, வயதான தம்பதியை சுற்றி சுற்றி வந்து கடித்துள்ளது.. அத்துடன், மாரியப்பனின் வேட்டியை இழுத்து அரை நிர்வாணமாக்கிவிட்டது.. இதனால் தம்பதி இருவருமே பயத்தில் அலறி கூச்சலிட்டுள்ளனர்.. இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு, அந்த பகுதியிலிருந்தவர்கள் தெருவில் வந்து பார்த்துள்ளனர்..

அப்போது, அந்த தெருவாசிகளையும் நாய் துரத்தி சென்று கடித்திருக்கிறது.. இதுகுறித்து கவியரசனிடம் அப்பகுதி மக்கள் கேட்டதற்கு, தனக்கு காவல்துறையில் உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் தெரியும் என கூறி அவர்களையும் கவியரசன் மிரட்டினாராம்.

சென்னையில் கொடுமை

ராட்லர் நாய் பாய்ந்து கடித்ததில், காயமடைந்தார் மாரியப்பன்.. இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையும் பெற்றார். பிறகு இந்த சம்பவம் தொடர்பாக புழல் போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால்,போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில்தான், வயதான தம்பதியை நாய் கடிக்கும் வீடியோ, சோஷியலில் ஷேர் செய்யப்பட்டது.. இதைப்பார்த்து இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு, அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 41, என்பவரும், அதே புழல் போலீசில் புகார் தந்தார்..

இதற்கு பிறகுதான், 2 பிரிவுகளில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. அத்துடன், ராட்வீலர் வகை நாயை, சங்கிலி மற்றும் முக கவசம் அணிவிக்காமல் வெளியே அழைத்து வந்தது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் வாங்க வேண்டும்

நாய் வளர்க்க வேண்டுமானால், கண்டிப்பாக லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியானது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ராட்வீலர் உள்ளிட்ட 23 வெளிநாட்டு வகை நாய்களை வளர்க்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், தடையை மீறி இதுபோன்ற நாய் வகைகளை சிலர் வளர்த்து வருகின்றனர்.

ஏற்கனவே மாரியப்பன் தந்த புகாரின்பேரில் போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை.. ரமேஷ் என்பவர் தந்த புகாரின்பேரில்தான் வழக்கு பதிவாகியிருக்கிறது.. மாரியப்பன் அலறி துடித்தபோது, அவரை காப்பாற்ற முயன்றவர் அந்த தெருவை சேர்ந்த ரமேஷ்தான்.. ஆனால், ரமேஷின் தொடையிலும் நாய் கடித்துள்ளது.. அதனால்தான் அவர் புகார் தந்துள்ளார்.. அதே பகுதியில் கடந்த ஒரு வருடமாக வசித்து வரும் 3 நபர்களை இந்த ராட்வீலர் நாய் கடித்திருக்கிறதாம்.

வயதான தம்பதி

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சொல்லும்போது ''வயதான தம்பதி என்றும் பார்க்காமல் நாயை விட்டு கடிக்க வைத்த வழக்கறிஞர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராட்வீலர் நாய் வளர்க்கும் நபர் கொரட்டூர் காவல் நிலைய எல்லையிலும், நாயால் பாதிக்கப்பட்ட நபர் புழல் காவல் நிலைய எல்லையிலும் வசித்து வருகின்றனர். எனவே கொரட்டூர் மற்றும் புழல் ஆகிய 2 காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+