சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்.. அதுவும் துணி மாற்றும் ரூமில், நர்ஸை சீண்டியது இந்த விஐபி?
சென்னை: சென்னை ராயப்பேட்டை டாக்டர் சுப்பையா சண்முகம் மீது மீண்டும் ஒரு பரபரப்பு புகார் தரப்பட்டுள்ளது.. இதுகுறித்த விசாரணையும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எனினும் இதுகுறித்த உண்மைத்தன்மை என்னவென்று தெரியவில்லை.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை பிரிவு தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம்... இவர் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) முன்னாள் தேசிய தலைவராகவும் இருந்தவர்.
ஆர்எஸ்எஸ்: ஆர்எஸ்எஸ்சின் ஒரு பிரிவான ஏபிவிபி மாநில தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா பரபரப்புக்கு பெயர் போனவர்.. இவர் ஒரு அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார்.. இந்த அப்பார்ட்மென்ட்டில், வயதான பெண்ணின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தியிருந்தார் சுப்பையா.. இது வீடியோ ஆதாரத்துடன் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்திருந்தது.

அப்போது இது குறித்து ஆதாரத்துடன் புகார் செய்யப்பட்டதால், சுப்பையா கைது செய்யப்பட்டார்.. இதற்கு பிறகு பணியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்... இதையடுத்து ஜாமீனில் வெளியில் வந்தவர் மறுபடியும் டியூட்டியில் சேர்ந்தார்.. இப்போது மறுபடியும் அவர்மீது புகார் எழுந்துள்ளது.. அதுவும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொந்தரவு: இதுகுறித்து ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள் தரப்பில் சொல்லப்படுவதாவது: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. ஆபரேஷன் முடிந்து வெளியே வந்த டாக்டர் சுப்பையா சண்முகம், அறுவை சிகிச்சை அறையின் அருகே நர்ஸ்கள் டிரஸ் மாற்றும் ரூமுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவருடன் ஆபரேஷனின்போது உதவி செய்த நர்ஸ் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த நர்ஸ், நடந்ததை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில், சக நர்ஸ்களிடம் இதைபற்றி சொல்லி அழுதுள்ளார்.. இதற்கு பிறகு, டாக்டர் மீது புகார் அளிக்க வேண்டுமானால், உரிய ஆதாரம் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.. எனவே ஆதாரத்தை திரட்டுவதற்காக, யாருக்கும் தெரியாமல் நர்ஸ்கள் உடை மாற்றும் ரூமில், செல்போன் கேமரா வைத்துவிட்டனர்..
நர்ஸ்கள்: அப்போது வழக்கம்போல் மறுபடியும் டாக்டர் சுப்பையா சண்முகம், நர்ஸிடம் தவறாக நடக்க முயன்றார். அந்த நர்ஸ் சாதுரியமாக அவரிடமிருந்து தப்பி வந்துவிட்டார்.. பிறகு பாதிக்கப்பட்ட நர்ஸ்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆயிஷாவிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர்.
இந்த புகாரின்படி, கண்காணிப்பாளரான டாக்டர் ஆயிஷா, சுப்பையா சண்முகத்திடம் மருத்துவமனை விசாகா கமிட்டி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி கடந்த 2 மாதத்திற்கு மேலாக செவிலியர்கள், டாக்டர் சுப்பையாவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தினை 3 முறை பெற்றனர்.
நடவடிக்கை: இந்த விசாகா கமிட்டியின் அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, விசாகா கமிட்டியின் அறிக்கையை டாக்டர் சுப்பையா நீர்த்து போக செய்ய முயற்சித்து வருகிறார்.
இந்த 2 மாத காலமாகவே, இந்த விஷயம் ரகசியமாக இருந்த நிலையில், இப்போது சோஷியல் மீடியா மூலம் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக டாக்டர் சுப்பையா சண்முகத்தின் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் நம்புகிறோம்" என்றனர்
அத்துமீறல்: இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆயிஷா சொன்னதாவது: டாக்டர் சுப்பையா மீது, பெண் நர்ஸ் ஒருவர் பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். அது தொடர்பான, சிசிடிவி காட்சிகளும் பெறப்பட்டன.
அதனடிப்படையில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அடங்கிய, பணியிடங்களில் பாலியல் புகார்களை விசாரிக்கும் சிறப்பு குழுவான, விசாகா குழுவினர், 2 மாதங்களாக விசாரித்து வருகின்றனர். விசாரணை அறிக்கை, விரைவில் மருத்துவக் கல்வி இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
காழ்ப்புணர்ச்சி: ஆனால், இந்த குற்றச்சாட்டினை டாக்டர் சுப்பையா மறுக்கிறார்.. இதுகுறித்து அவர் சொல்லும்போது, "இந்த விவகாரம் முழுக்க, முழுக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக சித்தரிக்கப்பட்ட ஒன்று. நான் எந்த தவறும் செய்யவில்லை'' என்றார்.
இப்படி இரு தரப்பிலுமே மாறி மாறி புகார் சொல்லப்படுவதால், நடந்த சம்பவம் குறித்த உண்மைத்தன்மை இதுவரை தெரியவில்லை.. டாக்டர் சுப்பையா நர்ஸிடம் தவறாக நடக்க முயன்றாரா? அல்லது வேண்டுமென்றே டாக்டர் சுப்பையா மீது பழிசுமத்தப்படுகிறதா என்றும் தெரியவில்லை.. இது தொடர்பான முழு விசாரணை நடந்துமுடிந்தால்தான், உண்மை தெரியவரும்...!!
ஏற்கனவே, பக்கத்து வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த டாக்டர் சுப்பையாவின் வினோத செயல், நாடு முழுவதும் சிசிடிவி கேமராவால் தெரியவந்து விட்டது. இப்போதும் இதே போன்ற சிசிடிவி கேமராவில் சிக்கியதாக கூறப்படுகிறது பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் கடந்த 2 நாட்களாகவே பரவி கொண்டிருக்கிறது












Click it and Unblock the Notifications