சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமையப்போகும் பிரம்மாண்டம்.. புகைப்படங்களை பாருங்க
சென்னை: கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஏற்கனவே 3 குளங்கள் இருக்கும் நிலையில் மேலும் 4 புதிய குளங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் முதல் குளத்திற்கான வேலைகளை அரசு செய்துவருகிறது. இதில் ஒவ்வொரு குளமும் சுமார் 3 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த குளங்கள் தொடர்பாக விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
பொதுவாகவே வடகிழக்கு பருவமழையின் போது சென்னையின் வேளச்சேரி, அடையாறு, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்படுவது வழக்கம். ஏரி பகுதிகள் எல்லாம் வீடுகளாக மாறிவிட்டது. அத்துடன் அந்த பகுதிகளில் மழைநீர் வெளியேறி பள்ளிக்கரைணை செல்ல வழிகளும் பெரிதாக இல்லை.. இதன் காரணமாக அங்கு வெள்ளம் வடிவதற்கு அதிக நாட்கள் ஆகிறது.இதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்

இதனை தடுக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி சார்பில் சமீபத்தில் கையகப்படுத்தப்பட்ட 168 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ரேஸ்கோர்ஸில் நான்கு குளங்களை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஏற்கனவே அங்கு 3 குளங்கள் உள்ள நிலையில், புதிதாக 4 குளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குளத்திற்கான வேலைகள் அரசு செய்து வருகிறது.. இதில் ஒவ்வொரு குளமும் சுமார் 3 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் இருக்கும் 300 அடி அகலமும் 100 அடி நீளமும், 22 அடி ஆழமும் கொண்ட 4 குளங்களில் 9 கோடியே 80 லட்சம் லிட்டர் நீரை சேமிக்க முடியும் என்றும், ஒட்டுமொத்தாக 12 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் அமைக்கப்படும் நான்கு குளங்களும் ஒன்றோடு ஒன்று இணைப்பில் உள்ள வகையில் அமைக்கப்பட உள்ளதாகவும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக ஏற்கனவே கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் பாழடைந்து காணப்பட்ட நிலையில் அவற்றையுமம் அரசு தூர்வாரி சீரமைத்து வருகிறது. அந்த மூன்று குளங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு அங்குள்ள கோல்ஃப் மைதானத்திற்கு பராமரிப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுவந்தது.. இந்நிலையில் தான் 168 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நான்கு குளங்களை சென்னை மாநகராட்சி உருவாக்கி வருகிறது. இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் முழுமை அடையும் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications