Tholkappiya Poonga: தொல்காப்பியப் பூங்கா திறப்பு! நடைப்பயிற்சிக்கான கட்டணம் எவ்வளவு?
சென்னை: சென்னையின் தொல்காப்பியப் பூங்கா புதுப்பொலிவுடன் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பிற்குப்பின், நடைப்பயிற்சிக் கட்டணங்கள் கணிசமாகக் குறைந்து, அனுமதி எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.
CRRT-ன் புனரமைப்பு முயற்சியால், இந்தச் சூழலியல் பூங்கா 24.10.2025 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. சென்னைக் கரையோரத்தின் செழிப்பான நகர்ப்புற ஈரநிலங்களில் ஒன்றாகத் திகழும் இது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தற்போது ஒரு அமர்வுக்கு 250 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அடையாறு ஆற்று முகத்துவாரப் பகுதியின் சூழலியல் மறுசீரமைப்பு ஒரு மைல்கல்லாகும். அண்மைக் கணக்கெடுப்பின்படி, இப்பூங்காவில் 549 வகையான உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது 2011ஆம் ஆண்டு 141 ஆக இருந்த நிலையிலிருந்து பல மடங்கு அதிகரிப்பைக் காட்டுகிறது. தொல்காப்பியப் பூங்கா தற்போது நகர்ப்புற உயிரிப் பன்மைத்துவத்தின் வாழ்விடமாக மிளிர்கிறது.
நடைப்பயிற்சி செய்ய எப்போது அனுமதி?
பூங்கா பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்காகப் பல செயல்பாடுகளை வழங்குகிறது. காலை 6:30-8:00, மாலை 4:30-6:00 என தினந்தோறும் நடைப்பயிற்சிக்கு அனுமதி உண்டு. மாணவ, மாணவியருக்கான சுற்றுச்சூழல் கல்வி வகுப்புகள் திங்கள் முதல் ஞாயிறு வரை (வியாழன், பொது விடுமுறைகள் தவிர) காலை 9:30-12:30 வரை நடத்தப்படுகின்றன.
சுற்றுப்பயணங்கள்
பொதுமக்களுக்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் திங்கள் முதல் ஞாயிறு வரை (வியாழன் மற்றும் பொது விடுமுறைகள் தவிர) பிற்பகல் 2:30-4:30 வரை ஏற்பாடு செய்யப்படுகின்றன. மறுசீரமைப்பிற்குப் பிறகு, 24.10.2025 முதல் இன்றுவரை, நடைப்பயிற்சி அனுமதியாளர்கள் நீங்கலாக, 6,843 மாணவ, மாணவியரும் 20,233 பொதுமக்களும் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர்.
நடைபயிற்சியாளர் எண்ணிக்கை
சீரமைப்பிற்கு முன்னர் 1.95 கி.மீ ஆக இருந்த நடைப்பயிற்சிப் பாதை, தற்போது கூடுதலாக 1.25 கி.மீ விரிவாக்கப்பட்டு மொத்தம் 3.20 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. காலை, மாலை நேர நடைப்பயிற்சியாளர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டியுள்ளதால், புதியவர்களுக்கு அனுமதி இயலாத நிலை உள்ளது. பிற்பகல் 2:30-4:30 நேரங்களில் அனைவருக்கும் அனுமதி தொடர்ந்து வழங்கப்படுகிறது.
சிரமம்
இச்சிரமத்தைக் கருதி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நடைப்பயிற்சி அனுமதி பிப்ரவரி 1, 2026 முதல் 500லிருந்து 3,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று முறை பூங்காவுக்கு வந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள, பயனாளிகளுக்கு மூன்று வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
கட்டணம் எவ்வளவு
திருத்தப்பட்ட நடைப்பயிற்சிக் கட்டணங்கள்: ஒரு மாதத்திற்கு ரூ.500/-லிருந்து ரூ.250/-; மூன்று மாதங்களுக்கு ரூ.1,500/-லிருந்து ரூ.750/-; ஆறு மாதங்களுக்கு ரூ.2,500/-லிருந்து ரூ. 1,250/-; பன்னிரண்டு மாதங்களுக்கு ரூ.5,000/-லிருந்து ரூ.2,500/- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமர்விலும் அதிகபட்சம் 300 பேர் மட்டுமே பூங்காவினுள் இருக்கும் வகையில் முறைப்படுத்தப்படுவார்கள்.
நுழைவுச் சீட்டு பெறுவது எப்படி
இந்த மாற்றங்கள், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, அதிகப்படியான பொதுமக்களுக்கும் பூங்காவை அணுகும் வாய்ப்பை வழங்கும். நுழைவுச்சீட்டு முன்பதிவு மற்றும் தகவல்களை www.crrt.tn.gov.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications