போலீசார் துப்பாக்கி வைத்து மிரட்டினாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: தூய்மைப் பணியாளர்கள் உறுதி!
சென்னை: "காவல்துறை துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை. தொடர்ந்து போராடுவோம்." என சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அரசு தரப்புடன் தூய்மை பணியாளர்கள் இன்று நடத்திய 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நீடிக்கும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.

சென்னையில் ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதை எதிர்த்து உழைப்பவர் உரிமை இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 10 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு பகலாக போராட்டம் தொடர்கிறது.
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட 7-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. முதல் ஆறு கட்ட பேச்சுவார்த்தைகளும் சுமுகமான முடிவை எட்டாத நிலையில் 7வது கட்ட பேச்சுவார்த்தைக்கு போராட்டக் குழுவினர் 15 நிமிடங்களில் வெளியேறினர். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகள், "இன்று 7ஆம் கட்டமாக அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், எங்களது கோரிக்கையை பற்றி ஒரு வார்த்தை கூட பேச தயாராக இல்லை. எங்களை அப்புறப்படுத்துவதை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை பண ஆசை காட்டி திமுக கவுன்சிலர்கள் போராட்டத்தை கலைக்கப் பார்க்கிறார்கள்.
நாங்கள் பணி செய்யும் இடம் இங்குதான். எங்களுக்கு இங்கே பேச உரிமை இருக்கிறது. இங்கே இருந்து கலைந்து சென்று ராஜரத்தினம் மைதானத்தில் போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இதுதான் சமூக நீதி அரசா? என்று கேள்வி எழுப்பி விட்டு வந்திருக்கிறோம். மாநகராட்சி இணை ஆணையர் ஜெயசீலன் 20 ஆண்டுகள் உழைத்த தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில், சில தொழிலாளர்கள் மட்டுமே போராடுகிறார்கள் சொல்கிறார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களது கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்.
காவல்துறை துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை. தொடர்ந்து போராடுவோம். அரசு தரப்பில் இருந்து பேசுவதற்கு தயாராக இல்லை; எங்களை வேறு இடத்திற்கு செல்லச் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு போதும் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். போராட்டம் தொடரும். தேர்தலுக்கு முன்னர் ஒரு பேச்சு தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சு என திமுக அரசு ஈடுபடுகிறது. போராட்டக்காரர்கள் பணிக்கு திரும்பியதாக வரும் தகவல் பொய்யான தகவல்" என்று தெரிவித்துள்ளனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications