இரவு முழுக்க வெளுத்தெடுத்த மழை.. சென்னையில் செம வானிலை.. எங்கெல்லாம் மழை பெய்தது!?
சென்னை: சென்னையில் இரவு முழுக்க பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் வானிலை திடீர் என்று குளிர்ச்சியாக மாறியுள்ளது.
Recommended Video
கடந்த ஒன்றரை மாதமாக தமிழகத்தில் மிக கடுமையான வானிலை நிலவி வந்தது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்த வண்ணம் இருந்தது. தினமும் பல மாவட்டங்களில் 100+ பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

அதிலும் சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிக மோசமான வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் இரவு முழுக்க பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் வானிலை திடீர் என்று குளிச்சியாக மாறியுள்ளது.சென்னையின் முக்கிய பகுதிகளில் அதிகாலை வரை கனமழை பெய்தது;.
சென்னை தி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. கிண்டி, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் மழை இரவு முழுக்க வெளுத்தெடுத்தது. இதனால் சென்னையில் நிலவிய கடுமையான வெப்பம் தணிந்துள்ளது .
சென்னையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடுமையான தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இப்படி மழை பெய்யும் என்கிறார்கள்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications