சென்னையில் அழகிகளை புக் செய்யும் "முரட்டு சிங்கிள்ஸ்.." காரணத்தை கேட்டால் மிரண்டு போவீங்க! என்னாச்சு
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடைபெறும் பார்ட்டிகளுக்கு ஜோடியாகச் செல்வதற்காக நடன அழகிகளைச் சென்னையைச் சேர்ந்த முரட்டு சிங்கிள்கள் 'புக்' செய்து வருகின்றனர்.
இதற்காகவே பல செல்போன் ஆப்-கள் (Apps) அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரவர் விருப்பத்திற்கேற்பவும், பண வசதிக்கேற்பவும் விதவிதமான மாடல் அழகிகளை இளைஞர்கள் புக் செய்து வருகிறார்கள்.
ஒரு நாள் இரவு நடனமாடுவதற்காக மட்டும் ரூ. 5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.80 ஆயிரம் வரை நடன அழகிகள் வாடகைக்குக் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

களைக்கட்டும் சென்னை
புத்தாண்டு நாளை பிறக்கவுள்ளதால், உலகமே கொண்டாட்ட மனநிலையில் மூழ்கியுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்கள் ஆடம்பர கொண்டாட்டங்களுக்கும், பார்ட்டிகளுக்கும் தயாராகி வருகின்றன. குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த இளைஞர்களும், இளம்பெண்களும் இன்று மாலையே 'பார்ட்டி மோடு'க்கு வந்துவிட்டனர். சிறிய ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை புத்தாண்டு பார்ட்டிகள் களைக்கட்ட தொடங்கிவிட்டன.

ஜோடி முக்கியம் பிகிலு..
சென்னையைப் பொறுத்தவரை, புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு விடிய விடிய பார்ட்டிகளும், கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஒருபுறம் நட்சத்திர ஓட்டல்களிலும், மறுபுறம் ஈசிஆர் சாலையில் உள்ள பெரிய பங்களாக்களிலும் இந்த பார்ட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். இதில் பெரும்பாலான பார்ட்டிகளில் ஆணும் பெண்ணும் ஜோடியாக வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இன்று சில பார்ட்டிகளில் ஜோடியாக வருபவர்களுக்கே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, சிங்கிளாக வருபவர்களுக்கு 3 மடங்கு கூடுதல் கட்டணம் இருக்கும்.

முரட்டு சிங்கிள்ஸுக்காக நடன அழகிகள்
இந்த நிபந்தனையால் 2k முரட்டு சிங்கிள்களும், ஜோடி கிடைக்காத 90ஸ் கிட்ஸ்களும் பல ஆடம்பர பார்ட்டிகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், இவர்களுக்காகவே தற்போது நடன அழகிகள் வாடகைக்குக் கிடைத்து வருகின்றனர். இவ்வாறு நடன அழகிகளை வாடைக்கு எடுக்கவே வலைதளம், ஆப்கள், வாட்ஸ் அப் குரூப்கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பெண்களை வாடகைக்கு எடுக்கத்தான் இளைஞர்கள் மத்தியில் போட்டாபோட்டி நடைபெற்று வருகிறது.

வாடகை எவ்வளவு?
இந்த நடன அழகிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வாடகைக்குக் கிடைக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. தங்கள் பண வசதிக்கேற்ப இவர்களை இளைஞர்கள் புக் செய்து வருகிறார்கள். இன்று இரவு மட்டுமே அந்த அழகிகள் இளைஞர்களுடன் இருப்பார்கள். பார்ட்டி முடிந்ததும் பெண்களைப் பத்திரமாக அந்தந்த இளைஞர்கள் அவர்கள் சொல்லும் இடத்துக்கு விட்டுவிட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடனேயே இந்த நடைமுறை அரங்கேறி வருகிறது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications