சென்னை மக்களே! இன்று இரவு வானில் நடக்கும் அதிசயம்.. மிஸ் பண்ணாதீங்க! வெதர்மேன் சொன்ன சூப்பர் விஷயம்
சென்னை: விண்வெளி என்பது நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. அதை புரிந்துகொள்ள தொடர்ந்து முயன்று வருகிறோம். அந்த வகையில் இன்று இரவு விண்வெளி நமக்கு அதிசயத்தை கொண்டு வர இருக்கிறது. எனவே இதை மிஸ் செய்ய வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இன்றிரவு சென்னையில் ஜெமினிட் விண்கல் மழை தெரிய இருக்கிறது. இது விண்கல் மழையின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. ஜெமினிட் விண்கற்கள் முதன்முதலில் 1800-களின் நடுப்பகுதியில்தான் தோன்றத் தொடங்கியது.

ஆரம்பத்தில், மணிக்கு 10 முதல் 20 விண்கற்கள் மட்டுமே தெரிந்ததால், அவை பிரம்மாண்டமானவையாகக் கருதப்படவில்லை. இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாக, இந்த விண்கல் மழை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஜெமினிட் விண்கல் மழையை ஆண்டுதோறும் நிகழும் வலிமையான விண்கல் மழைகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
விண்கல் மழை என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான விண்கல் மழையானது வால்நட்சத்திரத்தின் தூசியிலிருந்து வரும். ஆனால், ஜெமினிட்ஸ் விண்கல் மழை ஒரு விண்கல்லிலிருந்து வருகிறது. 3200 ஃபேட்டன் என்கிற இந்த விண்கல்லின் தூசியிலிருந்துதான் இந்த விண்கல் மழை பொழிகிறது. கடந்த 1983ம் ஆண்டுதான் இந்த விண்கல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த விண்கல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் காலத்தில் சூரியனை நோக்கி வரும். பின்னர் அப்படியே செவ்வாய் கிரகத்தை நோக்கி திரும்பி சென்றுவிடும்.
இப்படி வரும்போது ஏராளமான தூசிகளுடன் வரும். இந்த தூசிகள், அதாவது சிறிய கற்கள் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமிக்குள் விழுகிறது. இதுதான் பார்ப்பதற்கு விண்கல் மழையை போல தெரிகிறது. டிசம்பர் 14 இரவு முதல் டிசம்பர் 15 அதிகாலை வரை விண்கல் மழை உச்சத்தில் இருக்கும். அதிகாலை 2 மணிக்கு இது அற்புதமாக தெரியும். வானம் தெளிவாகவும் இருட்டாகவும் இருப்பின் சுமார் 100 விண்கற்கள் வரை பார்க்க முடியும். சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இதை பார்க்க முடியும்.
எப்படி இதை பார்ப்பது?
நகர வெளிச்சத்திலிருந்து விலகி, இருள் அதிகமாக இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பார்த்தால்தான் விண்கல் மழை பிரகாசமாக தெரியும். நள்ளிரவுக்குப் பிறகு பார்ப்பது சிறந்தது, அதிகாலை 2 மணியளவில் விண்கல் மழை உச்சத்தில் இருக்கும். கண்கள் இருளுக்கு முழுமையாகப் பழகுவதற்கு 20 நிமிடங்கள் ஆகும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். விண்கற்கள் கொத்து கொத்தாகத் தோன்றி, பின்னர் இடைவெளி விடும், எனவே பொறுமையாக இருங்கள். வசதியாகப் படுத்துக்கொண்டு முழு வானத்தையும் கவனியுங்கள்; விண்கற்கள் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். தொலைநோக்கி அல்லது பைனாகுலர் எதுவும் தேவையில்லை, உங்கள் கண்களும் சிறிது பொறுமையும் மட்டும் போதும்" என தெரிவித்திருக்கிறார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications