ஆஹா சென்னை கடற்கரை மொத்தமா மாற போகுது.. மெரினா டூ பெசன்ட் நகர் வர போகுது ரோப் கார்! பறந்தே போகலாம்
சென்னை: தலைநகர் சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட் நகரை இணைக்க அட்டகாசமான ஒரு திட்டம் வர உள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் சில நிமிடங்களில் மெரினா டூ பெசன்ட் நகர் சென்றடையலாம்.
சென்னையில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கிடையே சென்னை கடற்கரையை மொத்தமாகப் புரட்டிப் போடும் ஒரு திட்டத்தை நகராட்சி அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.

ரோப் கார்: அதாவது நாட்டின் மிக நீண்ட கடற்கரையான மெரினா கடற்கரையை பெசன்ட் நகருடன் இணைக்கும் வகையில், 4.6 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் பீச்சை சுற்றிலும் சுற்றுலாவை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனச் சொல்லப்படுகிறது. மேலும், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலையில், இந்த பகுதியில் போக்குவரத்தையும் இது பெரியளவில் குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
NHLML எனப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனம் 285 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் நீக்கப்பட்ட உடன் இதற்கான பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது.
அதிகாரிகள் தகவல்: தமிழக அரசு இத்திட்டத்திற்குக் கொள்கை ரீதியாக முதற்கட்ட அனுமதியைக் கொடுத்துவிட்டதாகவே அதிகாரிகள் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பே இத்திட்டம் குறித்த தகவல்கள் வெளியான போதிலும் அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை பணிகளை முன்கூட்டியே தொடங்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விரிவான சாத்தியக்கூறு அறிக்கை இறுதி செய்யப்பட்டவுடன், இத்திட்டத்திற்கு டெண்டர் விடப்படும். இந்த திட்டத்திற்குச் சுற்றுச்சூழல், வனம் துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி தேவைப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், சில நிலங்களைக் கையகப்படுத்துவதும் பணிகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல பல பணிகள் இருப்பதால் திட்டத்தைச் செயல்படுத்த அதிக நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
டிராபிக் குறையும்: இத்திட்டம் மெரினா கடற்கரையிலிருந்து எலியட்ஸ் அதாவது பெசன்ட் நகர் கடற்கரை வரையிலான சுற்றுலாவை மேம்படுத்துவது மட்டுமின்றி இப்பகுதியில் டிராஃபிக்கையும் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ரோப் காரில் மோனோகேபிள் கோண்டோலா ரோப்வே அமைப்பைப் பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 10 பேர் வரை செல்ல முடியும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்து, அனைத்து அனுமதிகளும் சரியாகக் கிடைத்து, நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இத்திட்டம் முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.
முதல்முறை இல்லை: அதேநேரம் நகரில் ரோப் கார் திட்டம் கொண்டு வர நடக்கும் முயற்சி இது முதல்முறை இல்லை.. முன்னதாக கடந்த 2022ல் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ஒரு ரோப் கார் திட்டத்தை முன்மொழிந்து இருந்தார்கள். அதில் நேப்பியர் பிரிட்ஜ் முதல் விவேகானந்தர் இல்லம் வரை ரோப் கார் அமைக்க மாநகராட்சி முன்மொழிந்தது. . இருப்பினும், அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இந்தச் சூழலில் இப்போது மெரினா டூ பெசன்ட் நகர் திட்டத்தை அதிகாரிகள் முன்மொழிந்துள்ள நிலையில், இத்திட்டத்தையாவது செயல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications