மாமனார், கணவன், மாமியாரை கொடூரமாக கொன்ற ஜெயமாலாவுக்கு.. பேருதவி செய்த மாஜி ராணுவ அதிகாரி கைது!
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு துப்பாக்கி கொடுத்ததாக அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தலில் சந்த் (74).. இவர் சென்னை சவுகார்பேட்டை விநாயகம் மேஸ்திரி தெருவில் வசித்து வந்தார். அங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தனது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (36) மற்றும் மருகமள் ஜெயமாலா ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 11ம் தேதி தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (36) ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தப்பிய மருமகள்
அதில், பைனான்சியர் தலில் சந்த். மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (36) ஆகிய 3 பேரை சுட்டுக்கொன்றது அவரது மருமகள் ஜெயமாலா என்பது விசாரணையில் தெரியவந்தது. கணவன், மாமானார் மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய ஜெயமாலா, சகோதரர்கள் விலாஷ் மற்றும் ராஜிவ் ஷிண்டேவுடன் ஆக்ரா சென்று தலைமறைவானார். அங்கு மூன்று பேரும் ஒரு ஓட்டலில் தங்கி இருந்துள்ளார்கள்.

சுற்றி வளைத்த போலீஸ்
அப்போது, பதற்றத்தில் கையில் வைத்திருந்த செல்போனில் கால் பட்டனை அழுத்திவிட்டார். ஏற்கனவே, ஜெயமாலாவின் செல்போன் சிக்னலை கண்காணித்து வந்த தனிப்படையினர், அதை வைத்து அவர்கள் தங்கியிருந்த ஓட்டலை சுற்றிவளைத்து, ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தார்கள்.

சொகுசாக வாழ கொலை
ஜெயமாலாவிடம் நடத்திய விசாரணையில். சொகுசாக வாழ பணம் தேவைப்பட்டதால் கொன்றதாக போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், என் கணவன், மாமனார, மாமியாரை கொன்று பணம், சொத்துகளை அபகரிக்க முடிவு செய்தேன். என் சகோதர் விலாஷ் வழக்கறிஞர் என்பதால், இவர் மூலம், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மற்றும் விமானப்படை அதிகாரிகளின் வாயிலாக 2 துப்பாக்கிகளை வாங்கி, கணவர் உள்ளிட்ட மூன்று பேரையும் சுட்டுக்கொன்றோம்..

எப்படி கொன்றார்
மூவரையும் கொன்றுவிட்டு, வீட்டில் உள்ள நகை, பணத்தை அள்ளிச் செல்ல திட்டமிட்டோம். ஆனால், வீட்டில் ₹1.80 லட்சம் மட்டுமே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு, இறந்து கிடந்த மாமியார் கைகளில் இருந்த 4 தங்க வளையல்களையும் உருவிக் கொண்டு தப்பினோம்" இவ்வாறு கூறினார். கைதான ஜெயமாலா உள்ளிட்ட மூவரை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தார்கள். இதுகுறித்த வழக்கில், ஜெயமாலா உள்ளிட்ட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை மட்டும் 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

துப்பாக்கி கொடுத்த ராணுவ அதிகாரி
இந்நிலையில் அவர்கள் கொலைக்கு 2 துப்பாக்கிகளை பயன்படுத்தி இருந்த நிலையில் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கியாகும். அந்தத் துப்பாக்கி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே என்பவருடையது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

விசாரணைக்கு பின் கைது
இதன் அடிப்படையில் ராஜீவ் துபேவையும், அவரது மனைவி மது துபே என்பவரையும் போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
மது துபே ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. இவரது காரைத்தான் கொலை செய்ய கொலையாளிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள் . காரையும், துப்பாக்கியும் தெரிந்தே இவர்கள் கொலையாளிகளுக்கு கொடுத்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர், இன்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே கைது செய்யப்பட்டார்.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications