ஒரு கிலோவுக்கு மேல் கஞ்சா.. இளைஞருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை.. சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஒரு கிலோவிற்கு மேல் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புளியந்தோப்பு அருகே கஞ்சா விற்கப்படுவதாக 2019-ஆம் ஆண்டு மே மாதம் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, அரவிந்தன் என்கிற இளைஞரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல், செய்ததுடன் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி C.திருமகள் முன்பு நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதிட்டார்.
பின்னர் நீதிபதி, கஞ்சா வைத்திருந்ததை காவல்துறை உரிய சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூறி, அரவிந்தனுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications