சென்னை- இலங்கைக்கு முதல் சொகுசு கப்பல்.. நீந்திகிட்டே ஷாப்பிங்.. இத்தனை வசதிகளா.. கட்டணம் எவ்வளவு?
சென்னை: இந்தியாவின் முதல் சர்வதேச சொகுசு கப்பல் சேவை சென்னையிலிருந்து இலங்கைக்கு தொடங்கியுள்ளது. இந்த கப்பலில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பலை இயக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எம்.பி. எம்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த பயணிகள் சொகுசு கப்பலை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் சென்னையிலிருந்து இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா திரிகோணமலை மற்றும் காங்கேசன் ஆகிய 3 துறைமுகங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.

இந்த கப்பலில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என பார்க்கலாம். சொகுசு கப்பல் என்றாலே சொகுசாக செல்லலாம. ஆனாலும் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாமே! இந்த கப்பல் நவீன கட்டமைப்பில் 11 மாடிகளுடன் வண்ண விளக்கொளியில் நட்சத்திர விடுதி போல இந்த சொகுசு கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இது பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக உள்ளது. இந்த கப்பலில் 1600 பயணிகள் வரை செல்ல முடியும். இங்கு ஏராளமான அறைகள் உள்ளன. அறைகளுக்குள் இருந்த வாறே கடலின் அழகை ரசிக்கும் வகையில் கண்ணாடி ஜன்னல்கள் வைக்கப்பட்டுள்ளன. கப்பலில் தனிமையில் பேசிக் கொள்ள ஆங்காங்கே பிரைவசி இருக்கை வசதிகள் உள்ளன.

இந்த கப்பலின் விசேஷம் என்னவென்றால் இங்கு எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருந்து கொண்டு கண்ணாடி வழியாக கடலை பார்க்கலாம். கப்பலின் மேல் பகுதியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. இதில் ஜாலியாக குளித்து கும்மாளம் போடலாம். இத்தனை வசதிகள் உள்ள இந்த கப்பலில் உணவு வசதி மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன.
உணவு பிரியர்களின் சுவை அரும்புகளை தூண்டும் வகையில் உணவுகள் பரிமாறப்படுகின்றன. நான் வெஜ் , வெஜ் என இரு வகையான உணவுகளும் பரிமாறப்படுகிறது. இங்கு மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் உள்ளது. ஒரு மாலுக்குள் நுழைந்தால் என்னென்ன வசதிகள் கிடைக்குமோ அதெல்லாம் இங்கு கிடைக்கும்.
மாலுக்கு போனால் துணி, நகை, பொம்மைகளை வாங்கலாம். அது போல் கப்பலில் வாங்க முடியுமா என கேட்காதீர்கள். நிச்சயம் இங்கும் வாங்க முடியும். கப்பல் பயணத்தின் போது பயணிகள் ஷாப்பிங் செய்ய ஏதுவாக பொம்மைகள், ஆடைகள், நகைகளை வாங்கிக் கொள்ளலாம். இங்கு இசை அரங்குகளும் உள்ளன. இதை பார்க்கும் பயணிகளும் இத்தனை நாள் பாத்ரூமுக்குள் பாடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த கப்பலில் பாடகர்களாக மாறி பாடி வருகிறார்கள்.

இந்த கப்பலில் ஸ்பாக்கள், பப்புகள், குழந்தைகள் விளையாடும் பகுதிகள், தியேட்டர்கள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. மும்பையில் ரூ 5000 கோடியில் சர்வதேச கப்பல் டெர்மினல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கப்பல் மூலம் அடுத்த 4 மாதங்களில் 50 ஆயிரம் பயணிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லக் கூடும் என கூறப்படுகிறது.
கார்டிலியா நிறுவனத்தின் கப்பல் கொச்சி, கோவா, மும்பை மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து இலங்கை செல்ல இநத் சொகுசு கப்பலில் 4 நாட்களுக்கு ரூ 85 ஆயிரம் முதல் ரூ 2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த கப்பல் ஜூன் 7ஆம் தேதி இலங்கைக்கு செல்லும். அங்கிருந்து திரிகோணமலைக்கு சென்று பின்னர் 9ஆம் தேதி சென்னை திரும்பும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications