Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பேயை அகற்றுவேன்".. யூத் போல நடித்து.. மிஸ் தமிழ்நாட்டை வன்புணர்வு செய்த போலீஸ்.. பாய்ந்த வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை சேர்ந்த மிஸ் தமிழ்நாடு பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீஸ் எஸ்எஸ்ஐ அதிகாரி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற அந்த பெண் வசித்து வருகிறார். அங்கு இவருக்கு சொந்தமான நிலம் ஒன்றில் இவர் வீடு கட்டி வந்துள்ளார்.

இதற்காக மேஸ்திரி ஒருவரிடம் இவர் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தனியாக இருந்ததை பயன்படுத்தி அந்த மேஸ்திரி சரியாக வீடு கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதில் அந்த பெண்ணுக்கு நிறைய பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பெற்றோர்கள் இருவரும் வெளிநாட்டில் உள்ளனர். இந்த நிலையில் வீடு கட்டுவதாக ஏமாற்றிவிட்டதாக அந்த மேஸ்திரிக்கு எதிராக புகார் கொடுக்க அந்த மிஸ் தமிழ்நாடு முயன்று உள்ளார். அப்போதுதான் டிராபிக் போலீஸ் பிரிவில் எஸ்எஸ்ஐ ஆக இருந்த ஆண்ட்ரூஸ் கால்டுவெல்லை சந்தித்து இருக்கிறார்.

 ஆண்ட்ரூஸ் கால்டுவெல்

ஆண்ட்ரூஸ் கால்டுவெல்

நான் போலீசில் உயர் அதிகாரியாக இருக்கிறேன். இந்த கேஸை எளிதில் முடித்துவிடுவேன் என்று கூறி அந்த பெண்ணுடன் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் பழகி வந்துள்ளார். இந்த நிலையில்தான் அந்த பெண்ணின் பெற்றோர்கள் வெளிநாட்டிலேயே உடல்நலக்குறைவால் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இதை பயன்டுத்திக்கொண்ட போலீஸ் அதிகாரி ஆண்ட்ரூஸ் கால்டுவெல் அந்த பெண்ணுடன் நெருக்கம் காட்டி உள்ளார்.

பெண்ணுடன் நெருக்கம்

பெண்ணுடன் நெருக்கம்

ஒருநாள் துக்கத்தில் புலம்பிய அந்த பெண், அடுத்தடுத்து கெட்ட விஷயமாக நடக்குது.. வீடு பாதியில் நிற்குது.. அம்மா. அப்பா இறந்திட்டாங்க..என்ன பண்றதுன்னு தெரியல என்று புலம்பி இருக்கிறார். இதை பயன்படுத்திக்கொண்ட ஆண்ட்ரூஸ் கால்டுவெல், உங்கள் வீட்டில் பேய் இருக்கிறது. ஒரு ஜெபம் செய்ய வேண்டும் என்று கூறி அந்த பெண்ணை வலையில் வீழ்த்தி உள்ளார். அந்த பெண்ணும் இதை நம்பி ஏமாந்து உள்ளார்.

பாலியல் கொடுமை

பாலியல் கொடுமை

இதை பயன்படுத்தி மறுநாளே தனது அம்மா மற்றும் இன்னொரு இளைஞருடன் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் அந்த வீட்டில் ஜெபம் செய்துள்ளார். அதோடு ஒரு மாதம் நீ வெளியே செல்ல கூடாது. மீண்டும் பேய் பிடிக்கும் என்று கூறி, உனக்கு உதவியாக நான் இருக்கிறேன் என்று கூறி அந்த பெண்ணுடனே ஆண்ட்ரூஸ் கால்டுவெல் தங்கி இருக்கிறார். இந்த ஒரு மாதத்தில் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை ஆண்ட்ரூஸ் கால்டுவெல் வன்புணர்வு செய்ததாக புகார் உள்ளது.

காதல்

காதல்

ஆனால் இதையும் நம்பி ஏற்றுக்கொண்ட அந்த பெண் ஆண்ட்ரூஸ் கால்டுவெல்லை காதலிக்க தொடங்கி உள்ளார். ஆண்ட்ரூஸ் கால்டுவெல் தனக்கு 40 வயதுதான் ஆகிறது... நான் போலீசில் உயர் அதிகாரி., உன்னை நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று கூறி உள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து ஆண்ட்ரூஸ் கால்டுவெல் ஐடி கார்டை பார்த்த அந்த பெண் ஆண்ட்ரூஸ் கால்டுவெல்லுக்கு 56 வயது ஆவதும், அவர் உயர் அதிகாரி இல்லை, எஸ்எஸ்ஐ என்பதும் தெரிய வந்தது.

வன்புணர்வு புகார்

வன்புணர்வு புகார்

இதையடுத்து ஆண்ட்ரூஸ் கால்டுவெல் பற்றி விசாரித்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆண்ட்ரூஸ் கால்டுவெல் ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததையும், வேறு சில பெண்களை ஏமாற்றியதையும் அந்த பெண் கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து காவல்நிலையத்தில் ஆண்ட்ரூஸ் கால்டுவெல்லுக்கு எதிராக அந்த பெண் பாலியல் வன்புணர்வு புகார் கொடுத்துள்ளார். ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீது வன்புணர்வு வழக்கு பதிந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+