சென்னை மின்சார ரயில்கள் ரத்து.. ஆகஸ்ட் 18 வரை ரயில் சேவையில் மாற்றம்! எப்போது வழக்கம் போல இயங்கும்?
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் இப்போது ரயில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக ஆக. 14ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆக. 18ம் தேதி மதியம் முதல் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை இப்போது சென்னை சென்டிரல், எழும்பூருக்கு அடுத்து மூன்றாவது முக்கிய முனையமாகத் தாம்பரம் ரயில் நிலையம் இருக்கிறது.

இந்த தாம்பரம் ரயில் முனையத்தை மறுசீரமைக்கும் பணிகள் இப்போது நடந்து வருகிறது. இதன் காரணமாகத் தாம்பரம் ரயில் நிலையத்தில் பல ரயில் சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.
மின்சார ரயில்கள்: கடந்த மாதம் முதலே சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்பட்டும் பல ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டது. தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக முதலில் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ரயில் சேவை மேலும் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆக. 18ம் தேதி வரை மொத்தம் 55 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து: விழுப்புரம் - தாம்பரம் (06028), விழுப்புரம் - மேல் மருவத்தூர் (06726), மேல் மருவத்தூர் - சென்னை கடற்கரை (06722), புதுச்சேரி - சென்னை எழும்பூர்(06026), சென்னை எழும்பூர் - புதுச்சேரி (06025), சென்னை கடற்கரை - மேல் மருவத்தூர் (06721), மேல் மருவத்தூர் - விழுப்புரம் (06725), தாம்பரம் - விழுப்புரம் (06027) ஆகிய ரயில்கள் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 17 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் ரயில் நிலையம்: மேலும், சென்னை புறநகரில் இயக்கப்படும் ரயில்கள் பீச் முதல் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல செங்கல்பட்டில் இருந்து வரும் ரயில்களும் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பயணிகளின் தேவை கருதிக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் ரயில்கள் வழக்கம் போல இயங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி பகல் 12 மணி முதல் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படியே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.. ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்ட நாள்களில் பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications