சென்னையில் இன்று முதல் 42 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்.. அரசு ஊழியர்கள் பயணிக்கலாம்
சென்னை: அத்தியாவசிய அரசு பணிகளுக்கு செல்ல இன்று முதல் 42 புறநகர் மின்சார ரயில்கள் சென்னையில் இயக்கப்படுகிறது.
Recommended Video
அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி கிடையாது, அடையாள அட்டை இல்லாமல் வந்தால் அரசு ஊழியராக இருந்தாலும் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த அரசு 50 சதவீதம் பணியாளர்களுடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவித்தது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய அரசு பணிகளில் ஈடுபடுபவர்களின் வசதிக்காக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது.
அதன்படி சென்ட்ரலில் இருந்து காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை அரக்கோணத்திற்கும் அதைப்போன்று மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும், அதைப்போன்று சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு- கடற்கரைக்கும் இரண்டு வழிதடங்களில் 30க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில் அண்மையில் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதன்படி அனைத்து அலுவலகங்களும் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார ரயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதையடுத்து கூடுதல் மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் கூடுதலாக 12 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று காலை 5.30 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டுக்கு சென்றடையும். அதைப்போன்று செங்கல்பட்டில் இருந்து ஒரு ரயில் கடற்கரைக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள் மட்டும் பயணிக்கலாம். ஆனால் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 12 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து வழித்தடங்களில் சேர்த்து இன்று 42க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு எப்போது புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்பது குறித்து அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications