சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்! ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி
சென்னை: புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், வழக்கத்தை விட குறைவான அளவில் மட்டுமே புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்திருக்கிறது.
வழக்கமாக தினமும் 204 முறை எழும்பூர் வழியாக புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இன்று தொடங்கி அடுத்த 45 நாட்களுக்கு, பராமரிப்பு பணிகள் காரணமாக 164 முறை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக 10 மற்றும் 11வது நடைமேடைகளில் புறநகர் ரயில்கள் நின்று செல்லும். ஆனால், தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக 5 மற்றும் 6வது நடைமேடைகளில் ரயில்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வழக்கமாக பயணிக்கும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதேபோல ரயிலகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், வெளியூரிலிருந்து வீடு திரும்புவோர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் ரயில்கள், இன்று முதல் 20-30 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியுள்ளது.
புறநகர் ரயில்களை பொறுத்தவரை 4 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும்.
1. சென்ட்ரல்-அரக்கோணம்
2. சென்ட்ரல்-சூலூர்பேட்டை
3. கடற்கரை-செங்கல்பட்டு
4. கடற்கரை-வேளச்சேரி
இதில் சென்னை கடற்கரை தொடங்கி செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில்களின் சேவைதான் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தாம்பரம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்குள் வரும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நிலைமையை சரியை செய்ய பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த பிரச்சனைக்கு நடுவில் இன்று அதிகாலை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. எனவே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications