பிரபல விஐபியின் ஓட்டல் ஊழியர்.. மண்டைக்கேறிய காமம்.. கதறி தெருவெல்லாம் ஓடிய பெண்.. சென்னையில் கொடுமை
சென்னை: தூங்கி கொண்டிருந்த பாட்டியைகூட விட்டு வைக்காமல் கொடுமை செய்திருக்கிறார்கள் காமுகர்கள்.. சென்னையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னை பாண்டிபஜார் ஆர்.கே.புரம் அம்மன் கோயில் லேன் பகுதியில் ஒரு பாட்டி வசித்து வருகிறார்.. இவருக்கு 85 வயதாகிறது.. இந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர் இந்த பாட்டி.

பால் பாக்கெட்: அதனால், வீடு வீடாக சென்று பால் பாக்கெட் போட்டு வருகிறார்... இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.. இந்த பாட்டி, வழக்கமாக ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகே இரவில் தூங்குவது வழக்கமாம்.. அப்படித்தான், கடந்த 4ம் தேதி அம்மன் கோயில் அருகே படுத்து தூங்கியிருக்கிறார்.
அப்போது, 25 வயதான ரமேஷ், 30 வயதான ராமராஜம் உள்ளிட்ட, 5 இளைஞர்கள், குடிபோதையில் அந்த பக்கமாக வந்துள்ளனர்.. பாட்டி தூங்கி கொண்டிருப்பதை பார்த்து, அவரது அருகில் சென்று, அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தந்திருக்கிறார்கள்..
வேதனை: அத்துடன் இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் 5 பேரும் பாட்டியை மிரட்டியிருக்கிறார்கள்... இதனால் பயந்துபோன பாட்டி, இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் பீதியிலும், வேதனையிலும் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்றிரவும் வழக்கம்போல் அம்மன் கோயில் அருகே பாட்டி தூங்கி கொண்டிருந்தார்.. இதை பார்த்த ரமேஷ் மற்றும் ராமராஜம் ஆகியோர், மறுபடியும் பாட்டிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.. இதற்கு பிறகு அளவுக்கு அதிகமாக பீதியடைந்த பாட்டி, அருகில் வசிக்கும் பொதுமக்களிடம் நடந்த சம்பவத்தையெல்லாம் சொல்லி அழுதுள்ளார். அவர்களிடம் உதவியும் கேட்டுள்ளார்.
ராயப்பேட்டை: இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, பாட்டியை டார்ச்சர் செய்த ரமேஷ், ராமராஜம் ஆகியோரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தார்கள்.. இதில் ரமேஷுக்கு படுகாயம் ஏற்படவும், ராமராஜம் வலிதாங்க முடியாமல் தப்பி ஓடிவிட்டான். பிறகு பாண்டிபஜார் போலீசார் தகவலறிந்து விரைந்து வந்து, ரமேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கு பிறகு பாதிக்கப்பட்ட பாட்டி, பாண்டி பஜார் போலீசில் புகார் அளித்தார்... பாலியல் புகார் என்பதால், உடனடியாக இந்த புகாரை தேனாம்பேட்டை மகளிர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. அதன்படி மகளிர் போலீசும், இதுகுறித்த விசாரணையில் இறங்கினார்கள்.
கொந்தளிப்பு: அந்த 5 இளைஞர்களுமே தி.நகரில் ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறார்களாம்.. அந்த ஓட்டல், அரசியல் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.. இவர்களிடம் நடத்திய விசாரணையில், பாட்டிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்ததுடன், காயப்படுத்தி தாக்கியதும் தெரியவந்தது. ஆனால், இவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லையாம்.. 5 பேரிடமும் விசாரணை மட்டும் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிகிறது.
இதனால் கொந்தளித்து போன அந்த ஏரியா மக்கள், பாட்டிக்கு தொந்தரவு கொடுத்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.. இந்த சம்பவத்தால் பாண்டி பஜார் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications