தாம்பரம் பெண் காவலருடன் உல்லாசம்.. ஒரே பொய்யில் காவலர், ஆட்டோ டிரைவர் என 2 பேரும்.. சிக்கியது எப்படி
சென்னை: சென்னை தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், போலீசாக பணியாற்றி வருகிறார். இவர், தாம்பரம் அடுத்த சேலையூர், பாரத் நகர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பெண் காவலரை காதல் வலையில் ஏமாற்றி , திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த போலீஸ்காரர் மற்றும் ஆட்டோ டிரைவர் கைதாகி உள்ளனர்.
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு கடைசியில் கைவிட்டுவிடுவது பல இடங்களில் நடக்கிறது. திருமண வாக்குறுதியை நம்பி காதலில் விழுந்து, கடைசியில் எல்லை மீறும் ஆண்களால் வாழ்க்கையில் பல பெண்கள் சிக்கலை சந்திக்கிறார்கள். இதில் பெண் காவலரும் விதிவிலக்கு அல்ல. பெண் காவலரை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த காவலர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகியோர் கைதாகி உள்ளனர்.

மதுரை காவலர்
மதுரை மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் சென்னை தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை-.. தாம்பரம் அடுத்த சேலையூர், பாரத் நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தபடி பணிக்கு சென்று வந்துள்ளார்.
பெண் போலீசுடன் உல்லாசம்
இந்நிலையில் ஆயுதப்படை பிரிவில் கபடி பயிற்சியாளராக பணியாற்றிய ஆவடி ஆயுதப்படை முதல் நிலை காவலரான சிட்லபாக்கம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த 35 வயதாகும் வீரமணி என்பவர் பெண் காவலருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பேசி பழகி வந்தார்களாம். பின்னர் இருவருக்கும் இடையே காதலாக மாறியதாக கூறப்படுகிறது. வீரமணி, தனது வீட்டில் யாரும் இல்லாதபோது பெண் போலீசை வீட்டுக்கு அழைத்துச்சென்று அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
நண்பருடன் பழக்கம்
இதற்கிடையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீஸ் வற்புறுத்தினார். ஆனால் காலம் கடத்தி வந்த வீரமணி, தனது நண்பரான சிட்லபாக்கம், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 30 வயதாகும் ஆட்டோ டிரைவர் சரத்குமார் என்பவரை பெண் போலீசுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
ஆட்டோ டிரைவரும் உல்லாசம்
அதன் பிறகு பெண் போலீஸ், சரத்குமாருடன் நெருங்கி பழகினார். அவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பெண் போலீசுடன் ஆட்டோ டிரைவர் சரத்குமாரும் உல்லாசமாக இருந்தாராம். அதில் அவர் கர்ப்பமடைந்தார்.இந்நிலையில் தற்போது குழந்தை வேண்டாம் என கூறிய சரத்குமார், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பெண் போலீசுக்கு கருகலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இருவரும் ஏமாற்றியுள்ளனர்
இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சரத்குமாரை பெண் போலீஸ் வற்புறுத்தினார். அப்போது தான் சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். காவலர் வீரமணி, அவரது நண்பரும் ஆட்டோ டிரைவருமான சரத்குமார் ஆகிய இருவரும் திட்டமிட்டு திருமண ஆசைவார்த்தைகள் கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்து ஏமாற்றியதை அறிந்த பெண் போலீஸ், இதுபற்றி தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
காவலர், ஆட்டோ டிரைவர் கைது
இதையடுத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சேலையூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டனர். அதன்படி சேலையூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் வீரமணி, அவரது நண்பரான ஆட்டோ டிரைவர் சரத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications