பெட்ரூமில் "உள்ளாடை"யுடன் யாரிது? சத்தமில்லாத கொடூர சில்மிஷம்.. சென்னை தாம்பரம் சேலையூரில்.. கருமம்
சென்னை: ஒரு விசித்திர பேர்வழி போலீசில் சிக்கி உள்ளார்.. அவர் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு, சென்னை போலீசாரே அதிர்ந்து போய் உள்ளனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் பகுதிகளில், சமீப காலமாகவே, நிறைய திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.. அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் தரப்பட்டிருக்கின்றன.. முக்கியமாக, பெண்களின் உள்ளாடைகள் தொடர்ந்து மாயமாகி கொண்டிருந்தன..

தாம்பரம்: இதையெல்லாம் பார்த்து, சேலையூர் மக்கள் அதிர்ந்து போனார்கள்.. குறிப்பாக, எம்.இ.சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில், நைட் நேரத்தில், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் இப்படியான சேட்டைகள் அதிகரித்துள்ளன.
இதை வெளியில் சொன்னால், தங்களுக்கு அவமானம் என்று நினைத்து, யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமலும் இருந்தனர். ஒருகட்டத்தில் கத்திமுனையில் பாலியல் சீண்டல்கள் நடக்கவும், வேறு வழியின்றி போலீசுக்கு தகவல் தந்தார்கள்..
மர்மநபர்: இவ்வளவு அக்கிரமத்தையும் செய்து கொண்டிருப்பது ஒரே ஒரு மர்ம மனிதன் என்றும், அவர் யாரென்று கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கேட்டுக் கொண்டார்களே தவிர, புகார் கொடுக்க எந்த பெண்ணுமே முன் வரவில்லை. ஆனாலும் போலீசார் இது தொடர்பான விசாரணையில் இறங்கினார்கள். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ய துவங்கினர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களும், நைட் நேரத்தில் ரகசியமாக கண்காணித்து கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, எதிர்பார்த்தபடியே அந்த மர்ம மனிதன் நடமாட துவங்கினான்.. சந்தேகப்படும்படி அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்ததால், அவரை பிடித்து பொதுமக்களே விசாரித்தனர்..
கார் டிரைவர்: ஆனால், அந்த இளைஞர், முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அங்கேயே சரமாரியாக தாக்கியதுடன், போலீசாரிடமும் ஒப்படைத்தனர். இத்தனை நாட்களும், நள்ளிரவில் அட்டகாசம் செய்தது இந்த மர்ம மனிதன்தான் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
அந்த திருடன் பெயர் தமிழ் பிரபு.. 28 வயதாகிறது.. தஞ்சாவூரை சேர்ந்தவர், சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறாராம்.. சேலையூரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
விநோத சபலம்: இவருக்கு சின்ன வயசில் இருந்தே, ஒரு வினோதமான ஆசை இருக்கிறது.. பெண்களின் உள்ளாடைகளை திருடிக்கொண்டு, அதை தன்னுடைய பெட்ரூமில், பக்கத்திலேயே வைத்துக் கொண்டுதான் தூங்குவாராம்.. நைட் முழுக்க அந்த உள்ளாடைகளுடன் தூங்கிவிட்டு, மறுநாள் காலையில், அவைகளை கொண்டுபோய் குப்பையில் வீசி விடுவாராம்.
மறுபடியும் அன்றிரவு தூங்குவதற்கு, மீண்டும் அதே போல திருடுவாராம்.. உள்ளாடைகளை திருடி வந்தவருக்கு, ஒரு கட்டத்தில் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டி பார்க்கவும் ஆசை துளிர்த்துள்ளது.. எனவே, பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டம் போட ஆரம்பித்துள்ளார்.. இதற்காக நைட் சாப்பிட்டு முடித்ததுமே, தெருக்களில் வாக்கிங் போவது போல, இயல்பாக நடந்து போவாராம்.. பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடுவாராம்..
காலிங் பெல்: ஏதாவது ஒரு வீட்டின் வாசலில், பெண்களின் செருப்பு மட்டும் கிடந்தால், அந்த வீட்டில் பெண்கள் தனியாக இருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொள்வாராம். பிறகு அந்த வீட்டின் காலிங்பெல்லை அடிப்பாராம்..
பெண்கள் கதவை திறந்து வெளியே வந்தால், உடனடியாக அவர்களது தலைமுடியை கெட்டியாக பிடித்து கொள்வாராம்.. பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து, அவர்களின் கழுத்தில் வைத்து, அப்படியே வீட்டுக்குள் தள்ளிக்கொண்டு போய், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவாராம்.. பிறகு, வீட்டிற்குள்ளிருக்கும் உள்ளாடைகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவாராம்..
அதிசய திருடன்: இத்தனைக்கும் இவர் அத்துமீறி செல்லும் அந்த வீடுகளில், நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் கிடந்தாலும், எந்த பொருளையும் தொட்டது கிடையாதாம்.. அந்த பொருட்களின் மீது அவருக்கு துளியும் ஆசை கிடையாதாம்..
சத்தமின்றி ஆசை தீர சில்மிஷம் செய்து விட்டு, சத்தமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விடுவதே வாடிக்கையாக இருந்திருக்கிறது.. இப்படி இதே பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நடந்திருக்கிறாராம்.. இதெல்லாம் போலீசாரிடம் அவரே வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்..
அவமானம் கருதி, பெண்கள் யாரும் புகார் தராததால், போலீஸாரிடம் இதுவரை ஒருமுறைகூட இவர் சிக்கியது கிடையாதாம். இப்போதுதான் முதல் முறையாக, மாமியார் வீட்டுக்கு போயிருக்கிறார் விநோத சபலிஸ்ட் தமிழ்பிரபு..!!!












Click it and Unblock the Notifications