கிளாம்பாக்கத்தை விடுங்க.. மொத்தமா "கலர்" மாறும் தாம்பரம்.. மின்னல் ஸ்பீடில் சென்னைக்கு "வரப்பிரசாதம்"
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் முனையம் எப்போது திறக்கப்படும் என்ற ஆர்வத்தில் சென்னைவாசிகள் உள்ள நிலையில், தென்னக ரயில்வே மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு, பயணிகளை திக்குமுக்காட வைத்துள்ளது. என்ன அது?
சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில்கள் ரொம்பவே முக்கியமானது... புறநகர் ரயில்கள், பறக்கும் ரயில்கள் இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதவையும்கூட..

சென்ட்ரல்: அதனால்தான் பயணிகளின் வசதிக்காக, ஒவ்வொரு முக்கிய அறிவிப்பையும் ரயில்வே வெளியிட்டு, அதை செயல்படுத்தியும் வருகிறது. அந்தவகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால்தான், தென் சென்னையில் குறிப்பாக தாம்பரம் மூன்றாவது ரயில் முனையமாக அறிவிக்கப்பட்டது.
ரயில் முனையம்: தாம்பரத்தில் 1,000 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் முனையம் அமைய இருப்பதாக கடந்த 2018-ல் தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.. புதிதாக 6 பிளாட்பார்ம்கள் கொண்ட டெர்மினல் கட்டிடம் கட்டப்பட உள்ளதாகவும், அதிலேயே பார்க்கிங் வசதி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்றவை கட்டப்பட இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் முனையத்தை படிப்படியாக விரிவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், அனைத்து நடைமேடைகள் விரிவாக்கமும், பணிமனைகளும் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன.. தேவைப்படும் இடங்களில் "எஸ்கலேட்டர்" அமைக்கப்படுகின்றன. இதைத்தவிர, மின் தூக்கி வசதி, சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போன்ற பணிகளும் நடந்து வருகின்றனவாம்..
நடைமேடைகள்: இதுகுறித்து தென்னக ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "7 மற்றும் 8ம் நடைமேடைகளை அகலப்படுத்தவும், 5 மற்றும் 6ம் நடைமேடைகளின் நீளத்தை விரிவாக்கம் செய்யவும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ...
மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. ஒட்டுமொத்த பணிகளும் அடுத்த வருடம் இறுதிக்குள் முடித்து, கூடுதல் விரைவு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் முடிந்ததுமே, 50 சதவீதம் ரயில்களை அதிகரித்து இயக்க முடியும். குறிப்பாக, தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு, வரும் ஆண்டுகளில் கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.
பூரிப்பு: தினமும் 3 லட்சம் பயணிகள் தாம்பரம் ஸ்டேஷனுக்கு வந்துபோகும் நிலையில், தென்னக ரயில்வே அறிவித்துள்ள இந்த தகவல் பூரிப்பையும் மகிழ்ச்சியையும் சென்னைவாசிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications