சென்னை வடபழனி வீடு.. வாடகைக்கு குடியிருந்த தேவிகலா கையில் எல்லாமே தங்கம்.. சிக்கியது எப்படி
சென்னை: சென்னை வடபழனியில் விவேக் என்பவர் தனது வீட்டின் சாவி கடந்த ஜூன் மாதம் தொலைந்துவிட்டதால் மாற்று சாவியை பயன்படுத்தி வந்தனர். கடந்த வாரம் வரலட்சுமி பூஜைக்காக வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை பார்த்தபோது அதில் சுமார் 28 கிராம் தங்க கம்மல், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.10 ஆயிரம் திருடு போய் இருப்பதை கண்பிடித்தார். கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண் திருடியது உறுதியானது. அவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. வீடுகள் தேவை அதிகம் உள்ளதால், வீடுகளை கட்டும் போதே, அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், லைன் வீடுகளாகவும் பலர் கட்டுகிறார்கள்.அப்படி கட்டும் வீடுகளை உரிமையாளர்கள் வாடகைக்கு விடுகிறார்கள். சென்னையில் ஒரு படுக்கை அறை, ஹால், கிச்சன், பாத்ரூம் இருந்தால் 10 ஆயிரம் முதல் 20 வரை வாடகையாக உள்ளது. இதே இரண்டு படுக்கை உள்ள வீடு என்றால் 17 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கூட உள்ளது. மூன்று படுக்கை என்றால் 20 முதல் ஒரு லட்சம் வரை கூட வாடகை வசூலிக்கப்படுகிறது.

சென்னை வாடகை வீடு
சென்னையில் வாடகைக்கு வீடு விடும் பலர், அங்கு குடிவருபவர்களின் முழு விவரங்களை வாங்கி கொண்டு தான் வாடகைக்கு விடுகிறார்கள். வாடகைக்கு குடியிருக்கும் சிலர், வீட்டின் உரிமையாளர்களை ஏமாற்றி வீட்டை மறு வாடகைக்கு விடுவது, வீட்டை லீசுக்கு விடுவது என்று செய்கிறார்கள். சிலர் வாடகையை ஒழுங்காக தராமல் அடாவடியாகவும் நடந்து கொள்கிறார்கள்.
வடபழனியில் திருட்டு
சிலர் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் சரி செய்யவே முடியாத அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தி விட்டு செல்கிறார்கள். சிலர் அடாவடியாகவும், ரவுடித்தனத்தனமாகவும் நடந்து கொள்கிறார்கள். சிலர் பக்கத்து வீட்டில் புகுந்து திருடவும் செய்கிறார்கள். மிக அபூர்வமாகவே இதுபோன்ற திருடர்கள் இருப்பார்கள். அப்படி ஒரு திருட்டு சம்பவம் தான் சென்னை வடபழனியில் நடந்துள்ளது
தங்க நகைகள் மாயம்
சென்னை வடபழனி, திருநகர், 2-வது தெருவை சேர்ந்த 37 வயதாகும் விவேக் , இவரது வீட்டின் சாவி கடந்த ஜூன் மாதம் தொலைந்துவிட்டதால் மாற்று சாவியை பயன்படுத்தி வந்திருக்கிறார். கடந்த வாரம் வரலட்சுமி பூஜைக்காக வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை பார்த்துள்ளார். அதில் சுமார் 28 கிராம் தங்க கம்மல், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.10 ஆயிரம் திருடு போய் இருந்ததாம்.இதை கண்டு விவேக் அதிர்ச்சி அடைந்தனர்.
வாடகைக்கு குடியிருந்த தேவிகலா கைது
இது குறித்து விவேக் சென்னை வடபழனி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அதில் விவேக் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் 44 வயதாகும் தேவிகலா என்பவர்தான் விவேக் வீட்டு சாவியை திருடி வைத்துக் கொண்டு அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும் சமயங்களில் திருடி வைத்திருந்த சாவியை பயன்படுத்தி உள்ளாராம்.வீட்டை திறந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. தேவிகலாவை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 26 கிராம் தங்க நகைகளை மீட்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications