என்னா அதிசயம்.. சென்னையில் முதல்முறையாக.. மிக மிக கம்மிதான்.. குட் கன்ட்ரோல்!
சென்னை: சென்னையில் டிபிஆர் சதவீதம் முதல்முறையாக 1 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை கொரோனா குறித்த தனியார் புள்ளி விவர ஆய்வாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
பாசிட்டிவிட்டி ரேட் என்றால் என்ன என பார்த்தோமேயானால் 100 பேருக்கு கொரோனா சோதனை எடுத்தால் அதில் எத்தனை பேருக்கு பாசிட்டிவ் வருகிறது என்பதுதான் டிபிஆர் எனப்படும் Test Positivity Rate.
பொதுவாக 100 பேரில் 6 அல்லது 5 பேருக்கு கீழ் கொரோனா வைரஸ் பாதிப்பு வருகிறது என்றால் அந்த இடத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என அர்த்தம். சென்னையில் கொரோனா தொற்று மிகவும் குறைந்து வருகிறது.

1 சதவீதம்
தற்போது முதல்முறையாக 1 சதவீதத்திற்கு குறைந்த அளவில பாசிட்டிவிட்டி ரேட் வந்துள்ளது. அதாவது 0.88 சதவீதம் ஆகும். இதுகுறித்து விஜய் ஆனந்த் தனது ட்வீட்டில் கூறுகையில் சென்னையில் முதல் முறையாக பாசிட்டிவிட்டி ரேட்டானது 0.88 சதவீதமாக உள்ளது.

சென்னை
கொரோனா ஒன்று மற்றும் இரண்டாவது அலையையும் சேர்த்து சென்னையில் நேற்றைய தினம் பாசிட்டிவிட்டி ரேட்டானது குறைந்துள்ளது. முதல் அலையின் போது கடந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி டிபிஆர் ரேட்டானது அதிகபட்சமாக 20.5 சதவீதமாகும். அது போல் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி டிபிஆர் ரேட்டானது குறைந்தபட்சமாக 1.2 சதவீதமாக இருந்தது.

27.7 சதவீதம்
கடந்த ஆண்டு மே 11 ஆம் தேதி இரண்டாவது அலையின் போது அதிகபட்சமாக டிபிஆர் ரேட் 27.7 சதவீதம் இருந்தது. ஜூன் 30 ஆம் தேதி நேற்று மிகவும் குறைந்தபட்சமாக 0.88 சதவீதம் இருக்கிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் சராசரியாக டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்டானது 5 சதவீதத்திற்கு கீழ் இருந்தது.

விஜய் ஆனந்த்
சேலத்தில் மட்டும் பாசிட்டிவிட்டி ரேட்டானது 5.24 சதவீதமாக இருந்தது. ஆக்ஸிஜன் படுக்கை வசதி, கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை, பாசிட்டிவிட்டி ரேட் உள்ளிட்டவற்றையும் ஆய்வாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டு வருகிறார்.
-
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications