சென்னை காவலர் குடியிருப்பில் கொத்தாக பெயர்ந்து விழுந்த மேற்கூரை.. பீதியில் குடியிருப்புவாசிகள்
சென்னை திருமுல்லைவாயலில் காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டின் படுக்கையறையில் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது.
சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டின் படுக்கையறையில் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. அந்த அறையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் காவலர் குடியிருப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அக்குடியிருப்பில் சுமார் 900 வீடுகள் வரை உள்ளன. அவற்றில் காவல்துறையில் பணியாற்றுபவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவலர் குடியிருப்பின் 5-வது மாடியில் அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் பாக்கியலட்சுமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் பணிக்கு சென்று விட்ட நிலையில் கணவர் , குழந்தைகள் உள்ளிட்டோர் வீட்டில் முன் அறையில் இருந்துள்ளனர்.
அப்போது படுக்கை அறையின் சிமெண்ட் மேற்கூரை திடீரென முழுவதுமாக பெயர்ந்து விழுந்தது . அங்கிருந்த கட்டிலில் மேற்கூரைகள் விழுந்தது. நல்லவேளை அந்த அறையில் அப்போது யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருமுல்லைவாயலில் புதிதாக கட்டப்பட்ட இக் குடியிருப்புக்கு அனைவரும் வந்து 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது.இந்நிலையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications