சென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு
Recommended Video
சென்னை: சென்னை தியாகராய நகர் பகுதி இன்று முதல் ஒருவழிப்பாதையாக மாறியுள்ளது. எந்த சாலையில் எப்படி செல்ல வேண்டும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
சென்னை தியாகராய நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அந்த பகுதியை ஒருவழிப்பாதையாக மாற்றி சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த திட்டம் இன்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
சென்னை மாநகரத்தின் முதல் பாதசாரி நடைப்பாதை பாண்டிபஜாரில் திறக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தியகராய நகரில் திய போக்குவரத்து ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பனகல் பார்க் வரை
தியாகராய நகர் பகுதி வியாழக்கிழமை (நவம்பர் 14) முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இதன்படி அண்ணாசாலையில் இருந்து பனகல் பூங்கா நோக்கி செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை சந்திப்பு வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

வெங்கட்நாராயணா சாலை
மேலும் பனகல் பூங்கா செல்ல விரும்பும் வாகனங்கள், தணிகாசலம் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, தணிகாசலம் சாலை வழியாக சென்று, வெங்கட்நாராயணா சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி பனகல் பூங்கா நோக்கி செல்லலாம்.

மா.பொ.சிவஞானம் சிலை
இதேபோல் பனகல் பூங்காவில் இருந்து அண்ணா சாலை சந்திப்புக்கு செல்ல வேண்டிய வாகனங்கள், பிரகாசம் சாலை, ஜிஎன் செட்டி சாலை சென்று அங்கிருந்து வாணி மகால் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, டாக்டர் நாயர் சாலை வழியாக தியாகராய சாலையில் இடது புறம் திரும்பி மா.பொ.சிவஞானம் சிலை வழியாக இனி அண்ணா சாலை செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல அடுக்கு வாகன நிறுத்தம்
இதனிடையே மூன்று மாதங்களில் தானிகாச்சலம் சாலை-தியாகராயா சாலை சந்திப்பில் பல நிலை வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் பார்க்கிங் ஏற்பாடுகள் திருத்தப்பட உள்ளது. பாண்டி பஜார் அருகே தெருக்களில் பார்க்கிங் செய்வது விரைவில் இறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications