இது வேற லெவல்.. சென்னையில் உருவான முதல் "ஸ்பாஞ்ச் பார்க்".. ஸ்டாலினின் கனவு பிளான்! என்ன சிறப்பு?
சென்னை: சென்னையை ஸ்பாஞ்ச் சிட்டியாக உருவாக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் முதல் ஸ்பாஞ்ச் பார்க் சென்னையில் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்தது. ஆனால் சென்னையில் கனமழை பெய்யும் கூட.. ஜூன் மாதத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தும் கூட எங்கும் வெள்ளம் தேங்கவில்லை.

சென்னையில் முன்பெல்லாம் எப்போது மழை பெய்தால் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாக தண்ணீர் அதிக நேரம் தேங்கி இருக்கும். ஆனால் தற்போது சென்னையில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க வெள்ள நீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்கள் தற்போது பலன் அளிக்க தொடங்கி உள்ளன.
சாலை ஓரங்களில் பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர் .முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் இந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு சென்னை முழுக்க 90% நிறைவேற்றப்பட்டு உள்ளது.
வெள்ளம் இல்லை: இந்த நிலையில்தான் சென்னையை ஸ்பாஞ்ச் சிட்டியாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருக்கும் பொது இடங்களை, திறந்தவெளி பகுதிகளை ஸ்பாஞ்ச் பகுதிகளாக மாற்ற முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னையில் மண்டலம் 6 இல் உள்ள முரசொலிமாறன் பூங்காவில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஸ்பாஞ்ச் பூங்கா பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சமீபத்திய இங்கே பெய்த மழையில் வெள்ள நீர் இந்த பகுதியில் வேகமாக நிரம்பி உள்ளது.
சுற்றுவட்டாரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை உடனடியாக வெளியுற்ற இந்த பார்க் உதவியாக உள்ளது. இது ஒரு குளம் போன்ற அமைப்பு ஆகும். மற்ற பகுதிகளில் உள்ள தண்ணீர் இங்கே நிரம்ப வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கும். மழை காலங்களில் மற்ற இடங்களில் இருந்து தண்ணீர் இந்த இடத்திற்கு வேகமாக வரும். மழை பெய்தால் தானாக இந்த பகுதிகள் தண்ணீரை உறிஞ்சு பூமிக்கு அனுப்பி விடும்.
#GCC is developing sponge parks to absorb the flood water during heavy rains! One such sponge park that was created recently in the Murasolimaran Park in Zone 6, is charged up with the flood water from the recent rains.#ChennaiCorporation | #NeermiguChennai | #ChennaiRains pic.twitter.com/JxbwT8DO5f
— Greater Chennai Corporation (@chennaicorp) June 23, 2023
கடற்பாசி: முதல் கட்டமாக இப்படி பல இடங்களில் ஸ்பாஞ்ச் பூங்காக்களை அமைக்க உள்ளார். கடற்பாசிகள் மூலம் இந்த ஸ்பாஞ்ச் பூங்காக்களை முதல் கட்டமாக அமைக்க உள்ளனர். வித்தியாசமான கட்டுமானம் மூலம் தரைப்பகுதி வேகமாக தண்ணீரை உறிஞ்சும் வசதியை ஏற்படுத்த உள்ளனர். 57 பூங்காக்களை தேர்வு செய்து அதில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைப்புகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்
மாத்தூர், எம்எம்டிஏ, திருவெற்றியூர் உள்ளிட்ட 5 இடங்களில் இருக்கும் பூங்காக்களை முதல் கட்டமாக தேர்வு செய்து ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்க உள்ளனர். இயற்கையாக தண்ணீரை உறிஞ்சி அது பூமிக்கு கீழ் தண்ணீரை அனுப்பும். இதற்காக 7 கோடி ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
சிறிய பூங்காக்கள்: அதேபோல் இந்த பூங்காக்கள் உள்ளேயே சிறிய குளங்கள், அகழிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த பகுதிகளுக்கு வெள்ளநீர் குழாய்கள் வழியாக தண்ணீர் செல்லும் வசதிகள் ஏற்படுத்தப்படும். அதன் மூலம் பூங்கா உள்ளே குளிர்ச்சியாக குளங்களும் இருக்கும். தண்ணீரும் மழை காலத்தில் எளிதாக வெளியேறும். இதனால் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வரும் காலத்தில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக 57 பூங்காக்களை தேர்வு செய்து அதில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைப்புகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications