சென்னையில் உருவாக்கப்படும் பஃப்பர் ஃசோன்.. 200கிமீக்கு ஒரு வாகனம் கூட நுழைய முடியாது.. அரசு அதிரடி
சென்னை: சென்னையில் 200 கிமீ சாலை பகுதிக்கு மோட்டார் அல்லாத போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நகரை அழகுபடுத்துவதை ஊக்குவிக்கவும், மூத்த குடிமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் கொண்டு வரப்பட உள்ளது.
NMT என்று அழைக்கப்படும் மோட்டார் அல்லாத போக்குவரத்து உள்கட்டமைப்பு விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. NMT திட்டத்தின் கீழ் மிக பெரிய நடைபாதைகள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஜங்சன்கள் மற்றும் தெரு அருகே உள்ள கடைகள், விற்பனை மையங்கள் ஆகியவை அமைக்கப்படும். மொத்தமாக 200 கிமீ தூரத்திற்கு.. சராசரியாக 15 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு 10 கிமீ தூரத்திற்கு மேலான இடங்கள் மோட்டார் அல்லாத போக்குவரத்து இடங்களாக மாற்றப்படும்.
உதாரணமாக இப்போது பாண்டிபஜார் இதே கட்டமைப்பை கொண்டு உள்ளது. ஆனால் அங்கே வாகனங்கள் அனுமதிக்கப்படும். இப்போது தொடக்கத்தில் உள்ள பார்க்கிங்கில் கார், பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நடந்தே செல்ல வேண்டும் என்ற விதி வந்தால் எப்படி இருக்கும். அதுதான் NMT என்று அழைக்கப்படும் மோட்டார் அல்லாத போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகும்.
வெளிநாடுகளில் இது சக்ஸஸ் மாடல். இன்னும் சொல்லப்போனால் இதுதான் எதிர்காலம். சென்னையில் இப்படி 200 கிமீ தூரத்திற்கு கொண்டு வர உள்ளனர் .

இங்கே சைக்கிளில் செல்ல அனுமதிக்கப்படும். சாலை ஓரம் மரங்கள் இருக்கும். வாகனங்கள் செல்ல முடியாது. நடைமேடையில் மிகப்பெரியதாக இருக்கும். சாலையோர கடைகள் நவீனமாக அமைக்கப்படும்.
பார்க்கிங்
அதேபோல் சென்னையில் சாலை ஓர பார்க்கிங்கை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சியின் CUMTA நகரம் முழுவதும் பார்க்கிங் கொள்கையை மாற்ற உள்ளது. சென்னையில் நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது. அதன்படி பார்க்கிங் செய்ய சென்னை முழுக்க கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளனர்.
லாட்டரி அடிப்படையிலான குடியிருப்பு பார்க்கிங் முறை கொண்டு வரப்பட உள்ளது. மற்ற இடங்களில் பார்க் செய்ய கட்டணம் கொண்டு வரும் முறை வர உள்ளது. தனியார் கட்டிடங்களில் உள்ள பார்க்கிங் பயன்படுத்த கட்டணம் விதிக்கப்பட உள்ளது. அதேபோல் இவி வாகனங்களுக்காக ஆஃப்-ஸ்ட்ரீட் லாட்களில் 20% EV சார்ஜிங் வசதியுடன் கூடிய பார்க்கிங்கில் அமைக்கப்பட உள்ளன. இதற்காக சென்னை முழுக்க பல இடங்களில் பார்க்கிங்குகள் அமைக்கப்பட முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
தி நகர் பார்க்கிங்
தி நகர் பகுதியில் போக்குவரத்தை குறைக்க வரி, கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே அங்கே உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்கான.. MLCP பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கே மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டணம் வெறும் 20 ரூபாய்தான். ஆனால் அதை மக்கள் பயன்படுத்தாமல் சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர்.
கார் பார்க்கிங் கட்டணம்: இது போக சென்னையில் சாலை ஓரங்களில் பார்க் செய்யப்படும் வாகனங்களை கண்காணிக்க எக்ஸ் ஃபோர்ஸ் படைகளை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் தவறான நிர்வாகம் என்ற பல புகார்களுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி தற்போது தமிழ்நாடு முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் "எக்ஸ் போர்ஸ்" படையை களமிறக்கி உள்ளது.
சென்னையில் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட தெரு பார்க்கிங் வசதிகளை நிர்வகிக்கும் வகையில் முன்னாள் போலீஸ் அதிகாரிகளை களமிறக்கி உள்ளது. இப்போது பார்க்கிங்கின் நிர்வாகத்தை சிவில் அமைப்பே நேரடியாகக் கையாண்டு வருகிறது. இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 மற்றும் காருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இதில் பல முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுவதால் முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் படையை தமிழ்நாடு அரசு இங்கே களமிறக்கி உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications